Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ம.பி. முதல்வராக கமல்நாத் தேர்வு.. புதிய சகாப்தம் மலர்ந்ததாக காங். வாழ்த்து!

மத்திய பிரதேச முதல்வராக கமல்நாத், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியால் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    மத்திய பிரதேச முதல்வராக கமல்நாத் தேர்வு

    போபால்: மத்திய பிரதேச முதல்வராக கமல்நாத் தேர்வாகியுள்ளார். மத்தியப் பிரதேசத்தில் புதிய சகாப்தம் மலர்ந்ததாக காங்கிரஸ் கட்சி வாழ்த்து தெரிவித்துள்ளது.

    முன்னதாக ஜோதிர் ஆதித்ய சிந்தியாவும் முதல்வர் பதவிக்கான போட்டியில் இருந்தார். இருப்பினும் கட்சித் தலைமை முடிவுக்குக் கட்டுப்பட்டு அவர் கமல்நாத் முதல்வராக வழி விட்டதைத் தொடர்ந்து கமல்நாத் முதல்வராகிறார். மத்திய பிரதேசத்தில் உள்ள 230 தொகுதியில் பாஜக 109 தொகுதிகளில் வெற்றிபெற்றுள்ளது.

    காங்கிரஸ் 114 தொகுதியில் வெற்றிபெற்றுள்ளது. அங்கு பெரும்பான்மை பெற 116 இடங்கள் தேவை. இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி பகுஜன் சமாஜ் துணையுடன் ஆட்சி அமைக்க உள்ளது.

    உரிமை கோரியது

    உரிமை கோரியது

    நேற்று இரவே மத்திய பிரதேசத்தில் ஆட்சி அமைக்க காங்கிரஸ் உரிமை கோரியது. மத்திய பிரதேச முதல்வர் ஆனந்தி பென் பாட்டீலை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரியது. காங்கிரஸ் தலைவர்கள் கமல்நாத், ஜோதிராதித்ய சிந்தியா ஆகியோர் கூட்டாக சென்று உரிமை கோரினார்கள்.

    முதல் தேர்வு

    முதல் தேர்வு

    மத்திய பிரதேசத்தில் முதல்வர் யார் என்று காங்கிரஸ் கட்சி முடிவு செய்ய முடியாமல் திணறியது.காங்கிரஸ் கட்சியில், மத்திய பிரதேச முதல்வராவதற்கு இரண்டு பேர் போட்டியில் இருந்தனர். ஒன்று காங்கிரஸ் மூத்த தலைவரும், மத்திய பிரதேச மாநில காங்கிரஸ் தலைவரும், எம்,பியுமான கமல்நாத்.

    பெரிய ஆதரவு

    பெரிய ஆதரவு

    மத்திய பிரதேசத்தில் கமல் நாத் முதல்வராக அதீத ஆர்வத்துடன் இருந்தார். இவருக்கு 75 சதவிகித காங்கிரஸ் எம்எல்ஏக்களின் ஆதரவு இருந்தது. இவர்தான் தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிந்த அன்று இரவே மத்திய பிரதேச ஆளுநர் ஆனந்தி பென் பாட்டீலை சந்திக்க நேரம் கேட்டு இருந்தார்.

    ஜோதிராதித்ய சிந்தியா போட்டி

    ஜோதிராதித்ய சிந்தியா போட்டி

    அதேபோல் காங்கிரஸ் கட்சி சார்பாக அங்கு ஜோதிராதித்ய சிந்தியாவும் முதல்வர் போட்டியில் இருந்தார். இவர் இரண்டு நாட்களுக்கு முன்பே காங்கிரஸ் சார்பாக மத்திய பிரதேச முதல்வராக தயார் என்று கூறினார். இவருக்கும் கணிசமான காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ஆதரவு இருந்தது குறிப்பிடதக்கது.

    கூட்டம் நடந்தது

    கூட்டம் நடந்தது

    இந்த நிலையில்தான் நேற்று மத்திய பிரதேசத்தில் காங். எம்எல்ஏக்கள் கூட்டம் நடந்தது. அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்கள் இதில் பங்கேற்றனர். முதல்வராக யாரை தேர்ந்தெடுப்பது என்பது பற்றி இதில் விவாதித்தனர். இந்த சந்திப்பு 2 மணி நேரம் நடந்தது.

    தீர்மானம் நிறைவேற்றம்

    தீர்மானம் நிறைவேற்றம்

    இதில் பெரும்பாலான உறுப்பினர்கள், கமல்நாத்திற்கு ஆதரவு வழங்கினார்கள். 70 சதவிகிதத்திற்கும் அதிகமான உறுப்பினர்கள் கமல்நாத்திற்கு ஆதரவு வழங்கினார்கள். ஜோதிராதித்ய சிந்தியாவும் கமல்நாத்தை முதல்வராக நியமிக்க பெரிய அளவில் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இதனால் கமல்நாத் அங்கு முதல்வராக வாய்ப்புள்ளது என்று நேற்றே தகவல்கள் வந்தது.

    முதல்வராக அறிவிப்பு

    மத்திய பிரதேச முதல்வரை ராகுல் காந்தியே தேர்வு செய்யலாம் என்று காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதற்காக கூட்டத்தில் ஒரு வரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த கமிட்டி கூட்டத்தை மேற்பார்வையிட்டு காங்கிரஸ் மூத்த நிர்வாகிகள் இன்று ராகுலை சந்தித்தனர். இதை தொடர்ந்து இந்த நிலையில் மத்திய பிரதேச முதல்வராக கமல்நாத் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்.

    சிந்தியாவுக்கு கமல்நாத் நன்றி

    சிந்தியாவுக்கு கமல்நாத் நன்றி

    புதிய முதல்வராக தேர்வாகியுள்ள கமல்நாத் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், னக்கு வழி விட்ட ஜோதிர் ஆதித்ய சிந்தியாவுக்கு நன்றி தெரிவித்தார். தான் ஒருபோதும் பதவிக்கு ஆசைப்பட்டதில்லை என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் பிரச்சாரத்தின்போது காங்கிரஸ் சார்பில் அறிவிக்கப்பட்ட அத்தனை வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும் என்றும் அவர் உறுதியளித்தார். முன்னதாக கமல்நாத்தின் தேர்வை எம்.எல்.ஏக்கள் கூட்ட முடிவில் மேலிடப் பார்வையாளரான ஏ.கே.அந்தோணி அறிவித்தார். புதிய முதல்வராக பதவியேற்கவுள்ள கமல்நாத் நாளை ஆளுநரை சந்தித்துப் பேசவுள்ளார்.

     18வது முதல்வர்

    18வது முதல்வர்

    கமல்நாத் மத்திய பிரதேசத்தின் 18வது முதல்வராக தேர்வாகி உள்ளார். கமல்நாத் ஆதரவாளர்கள் இதனால் காங்கிரஸ் அலுவலகத்திற்கு வெளியே வெடிவெடித்து கொண்டாடி வருகிறார்கள். இவர் என்று பதவி ஏற்கிறார் என்று விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+