அய்யய்யோ என்னை போலீஸ் கடத்திட்டாங்க... ராகுல் பரபர புகார்
டெல்லி போலீசார் தம்மை கடத்திவிட்டதாக ராகுல் காந்தி பரபரப்பு புகாரை கூறியுள்ளார்.
டெல்லி: தம்மை டெல்லி போலீசார் கடத்தியதாக காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்த புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒரே பதவி ஒரே ஓய்வூதியம் கோரிக்கையை முன்வைத்து முன்னாள் ராணுவ வீரர்கள் போராடி வருகின்றனர். இவர்களில் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதையடுத்து அந்த ராணுவ வீரரின் உறவினர்களை சந்திக்க ராகுல் காந்தி முயற்சித்தார். இதனால் அவரை கடந்த 2 நாட்களில் 3 முறை டெல்லி போலீசார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட ராகுல் காந்தி ஃபைரோஸ் ஷா சாலை மற்றும் துக்ளக் சாலை காவல்நிலையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டார். அப்போது போலீசாரிடம் ராகுல் காந்தி ஒரு புகார் கொடுத்தார்.
அதில் தம்மை டெல்லி போலீசார் 2 முறை கைது செய்ததாக குற்றம்சாட்டியிருந்தார். ஆனால் டெல்லி போலீசார் ராகுல் காந்தியின் புகாரை வாங்க மறுத்துவிட்டனர்.
இது குறித்து டெல்லி போலீசார் கூறுகையில், முதலில் பைரோஸ் ஷா சாலை காவல்நிலையத்துக்கு அவரை அழைத்துச் சென்றோம். ஆனால் இறங்க மறுத்துவிட்டார் ராகுல். இதனால் துக்ளக் ரோசு காவல்நிலையத்துக்கு அழைத்து சென்றோம். ஆனால் தம்மை போலீசார் கடத்தியதாக ராகுல் காந்தி புகார் கொடுத்தார். பின்னர் அவர் புகார் கொடுக்க வேண்டாம் என நிலையை மாற்றிவிட்டார் எனக் கூறினர்.
-
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications