குஜராத்தில் ராகுல் காந்தி! 2 நாள் சுற்று பயணம்!!
Subscribe to Oneindia Tamil
அகமதாபாத்: குஜராத் மாநிலத்தில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி இன்று முதல் 2 நாள் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருக்கிறார்.
பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் பதவி வேட்பாளராக குஜராத் முதல்வர் நரேந்திர மோடி அறிவிக்கப்பட்ட பிறகு அம் மாநிலத்துக்கு முதல் முறையாக ராகுல் காந்தி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

இன்று காலை ராகுல் காந்தி சபர்மதி ஆசிரமம் சென்றார். இதைத் தொடர்ந்து இந்திய தேசிய மாணவர் சங்க கூட்டத்தில் அவர் பேசுகிறார்.
மேலும் மாநில காங்கிரஸ் தலைவர்களுடன் ஆலோசனை நடத்துகிறார். பின்னர் நாளை ராஜ்கோட் மாவட்டத்திற்குச் சென்று கட்சித் தலைவர்களை சந்திக்கிறார்.












Click it and Unblock the Notifications