கேதார்நாத் கோவிலுக்கு ராகுல் காந்தி திடீர் பயணம்!
டேராடூன்: காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி நாடாளுமன்றத்தில் கடந்த 2 நாட்களாக அனல் பறக்கப் பேசி வந்த நிலையில் தற்போது ஆன்மீக பயணத்தில் குதித்துள்ளார். கேதார்நாத்துக்கு அவர் சாமி கும்பிடச் சென்றுள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தல் தோல்விக்குப் பின்னர் காங்கிரஸ் கட்சி மிகவும் தொய்ந்து போனது. ராகுல் காந்தியும் அமைதியாக இருந்து வந்தார். திடீரென சமீபத்தில் அரசியலுக்கு விடுமுறை என்று அறிவித்து விட்டு கிளம்பிச் சென்றார். அவர் எங்கு போனார் என்பது குறித்து தெரிவிக்கப்படவில்லை. இந்த நிலையில் 55 நாள் விடுமுறைக்குப் பின்னர் திரும்பி வந்த அவர் நாடாளுமன்றக் கூட்டத்தில் கடந்த 2 நாட்களாக புயல் கிளப்பி வருகிறார்.
டெல்லியில் நடந்த விவசாயிகள் மாநாட்டில் ஆவேசமாகப் பேசிய அவர், நாடாளுமன்றத்தில் மோடி அரசையும், மோடியையும், மத்திய அரசையும் கடுமையாக சாடிப் பேசி அனைவரையும் கவர்ந்தார். பாஜக தரப்பே கூட ராகுல் காந்திக்கு திடீரென இப்படி ஒரு வேகம் வரும் என்பதை எதிர்பார்க்கவில்லை.

இந்த நிலையில் நேற்று திடீரென அவர் கேதார்நாத் கோவிலுக்குக் கிளம்பிச் சென்றுள்ளார். சிவபெருமானின் 12 ஜோதிர்லிங்கங்களில் 11வது ஜோதிர்லிங்கம் அமைந்துள்ளது கேதர்நாத் தலமாகும். டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்ற அவர், உத்தரகாண்ட் மாநில தலைநகர் டேராடூனில் உள்ள ஜாலிகிராண்ட் விமான நிலையத்தை வந்தடைந்த ராகுல் காந்திக்கு, முதல்வர் ஹரிஷ் ராவாத் மற்றும் கட்சி நிர்வாகிகள் வரவேற்பு கொடுத்தனர்.
கடந்த 2013-ம் ஆண்டு கேதர்நாத்தில் நடந்த மழை வெள்ளத்தில் கேதர்நாத் கோவில் பகுதியில் பலத்த சேதம் ஏற்பட்டது. தற்போது அங்கு மேற்கொண்டுள்ள சீரமைப்பு பணிகள் பற்றிய படங்களை ராகுல்காந்தி பார்வையிட்டார். பின்னர், ஜாலிகிராண்ட் விமானநிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலமாக கவுரிகாந்திற்கு ராகுல் காந்தி புறப்பட்டார். அவருடன் மாநில காங்கிரஸ் பொறுப்பாளரும், முன்னாள் மத்திய மந்திரியுமான அம்பிகாசோனி, மாநிலத்தலைவர் கிஷோர் உபத்யாயா மற்றும் மூத்த தலைவர்கள் சென்றனர். கவுரிகாந்த் சென்ற ராகுல்காந்தி, அங்குள்ள லின்சோலி பகுதியில் இருந்து கேதர்நாத் செல்கிறார். அவர் இன்று காலை சாமி தரிசனம் செய்கிறார்.
-
காங்கிரசுக்கு ராஜ்யசபா எம்பி சீட் காலி? மீனாட்சி நடராஜனின் மனு.. உச்ச நீதிமன்றம் நிராகரித்தது ஏன்? -
"ஜோசியக்காரர் சொன்னாரே" விஜயின் கயிறும் ராகுலின் கேக்கும்! விடியல் பயணம் மட்டும் இல்லேனா? லியோனி நச் -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்!












Click it and Unblock the Notifications