ரயில்வே பட்ஜெட்டில் யார், யாருக்கு என்னென்ன கிடைத்துள்ளது?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இன்று தாக்கல் செய்யப்பட்ட ரயில்வே பட்ஜெட்டில் அனைத்து மக்களுக்கும் என்ன கிடைத்துள்ளது என்பதை தெரிந்து கொள்வோம்.

ரயில்வே பட்ஜெட்டை மத்திய ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபு இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் புதிய ரயில்கள் குறித்த அறிவிப்பு எதுவும் இல்லை. பயணிகள் ரயில் கட்டணம் குறைக்கப்படும் என்று எதிர்பார்த்த மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

இந்நிலையில் ரயில்வே பட்ஜெட்டினால் மக்களுக்கு என்ன நன்மை என்று தெரிந்து கொள்ளுங்கள்,

பாமர மக்கள்

பாமர மக்கள்

பயணிகள் ரயில் கட்டணம் உயர்த்தபடாதது ரயில்வே துறை மக்களுக்கு அளித்த பரிசு. ரயில்களை தனியார் நிறுவனங்கள் சுத்தப்படுத்தப் போவதும், பயோ டாய்லெட்டுகள் அறிமுகப்படுத்தப்படுவதும் நல்ல விஷயம். முன்பதிவு செய்யாமல் பயணிப்போர் 5 நிமிடங்களில் டிக்கெட் பெற ஆபரேஷன் 5 நிமிடம் அறிமுகப்படுத்தப்படுகிறது. இந்த பட்ஜெட் மூலம் சுத்தமான ரயில் பயணம், டிக்கெட் பெறுவதில் உள்ள சிக்கல் குறைகிறது.

வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு

மேக் இன் இந்தியா திட்டத்தின்கீழ் தயாரிப்பு வசதிகளை மேம்படுத்துவது, ஆட்டோ அல்லது டாக்சி டிரைவர்கள் டூர் கைட் போன்று செயல்பட வைப்பதன் மூலம் வேலைவாய்ப்பு உருவாக்கப்படுகிறது. மகளிர் சுய உதவிக்குழுக்களின் தயாரிப்புகள் விளம்பரப்படுத்தப்பட உள்ளது. ரயில்வே ஊழியர்களின் திறன் மேம்படுத்தப்பட உள்ளது.

பெண்கள்

பெண்கள்

புறநகர் ரயில்களில் பெண்களின் பாதுகாப்புக்காக சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட உள்ளது. பாதுகாப்பு குறித்து புகார் தெரிவிக்க ஹெல்ப்லைன் எண் அறிமுகம், கர்ப்பிணிகள் செல்ல சக்கர நாற்காலிகளை ரயில்வே இணையதளத்தில் முன்பதிவு செய்யலாம்.

மூத்த குடிமக்கள்

மூத்த குடிமக்கள்

மூத்த குடிமக்களுக்கு லோயர் பெர்த் அளிப்பது, அவர்கள் பயணிக்கும் பெட்டி ரயிலின் மத்தியில் இருக்கும்படி செய்வது, முக்கிய ரயில் நிலையங்களில் லிப்ட் மற்றும் எஸ்கலேட்டர்கள் வைப்பது குறித்து பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகள், ராணுவத்தினர்

விவசாயிகள், ராணுவத்தினர்

பழங்கள், காய்கறிகள் கெட்டுப்போகாமல் இருக்கத் தேவையான நவீன குளிரூட்டப்பட்ட மையங்கள், விவசாயிகள் புதிய விவசாய முறைகள் மற்றும் வியாபார தொழில்நுட்பங்களை கற்றுக் கொள்ள பயிற்சி, ராணுவத்தினர் பிரச்சனையின்றி பயணம் செய்ய வசதி செய்யப்பட உள்ளது.

மாற்றுத்திறனாளிகள்

மாற்றுத்திறனாளிகள்

மாற்றுத்திறனாளிகளுக்கு குறிப்பிட்ட ரயில் நிலையங்களில் ஆன்லைன் மூலம் சக்கர நாற்காலிகளை முன்பதிவு செய்யலாம். இ-டிக்கெட்டுகளில் சலுகை, முக்கிய ரயில் நிலையங்களில் லிப்ட்கள், எஸ்கலேட்டர்கள், புதிய பெட்டிகளில் பிரெய்லீ முறை, நுழைவுவாயில்களை அகலப்படுத்துவது குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழல்

சுற்றுச்சூழல்

சுற்றுச்சூழலை பாதுகாக்க கூடுதலாக 17,000 பயோ டாய்லெட்டுகள், சூரிய ஒளி மின்சாரம் பயன்படுத்தப்பட உள்ளது.

தொழில்கள்

தொழில்கள்

பிரதமரின் சுத்தமான இந்தியா, மேக் இன் இந்தியா திட்டங்கள் ரயில்வே துறையில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. முக்கிய பொருட்களை எடுத்துச் செல்ல புதிய பொதுப்பணித்துறை நிறுவனங்கள் ஈடுபடுத்தப்பட உள்ளன. மேக் இன் இந்தியா திட்டத்தின்கீழ் புல்லட் ரயில்கள் போன்ற ரயில்கள் தயாரிக்கப்பட உள்ளது.

பாதுகாப்பு

பாதுகாப்பு

மூத்த குடிமக்கள், கர்ப்பிணிகள், மாற்றுத்திறனாளிகளின் பாதுகாப்பு மேம்படுத்தப்பட உள்ளது. பாதுகாப்பு பணியில் இஸ்ரோவை ஈடுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

சுற்றுலா

சுற்றுலா

சுற்றுலாத் துறையை மேம்படுத்த புதிய ரயில்கள், முக்கிய சுற்றுலாத் தளங்களுக்கு செல்லும் குறிப்பிட்ட ரயில்களில் இருக்கைகள் அளிக்க சுற்றுலா ஏஜென்சீக்களுடன் உடன்பாடு, காந்தி தென்னாப்பிரிக்காவில் இருந்து நாடு திரும்பி 100 ஆண்டுகள் ஆகியதை கொண்டாட காந்தி சர்க்யூட்டுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+