2.3 கோடி பயணிகள்.. 26.5 லட்சம் டன் சரக்குகள்.. ரயில்வே துறை பற்றி சில 'புள்ளிவிவர' தகவல்கள்...
Subscribe to Oneindia Tamil
டெல்லி: நாள்தோறும் நாட்டின் ரயில்களில் 2.3 கோடி பயணிகள் பயணிக்கின்றனர். நாடாளுமன்றத்தில் இன்று மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு தாக்கல் செய்ய இருக்கும் ரயில்வே பட்ஜெட் இந்த பயணிகளின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யுமா? என ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

நம்முடைய இந்திய ரயில்வே துறை பற்றிய சில புள்ளி விவரங்களை பார்க்கலாம்:
- இந்தியாவில் இயக்கப்படும் ரயில்களில் நாள்தோறும் 2.3 கோடி பேர் பயணம் மேற்கொள்கின்றனர்.
- நாடு முழுவதும் நாள்தோறும் 12,617 ரயில்கள் இயக்கப்படுகின்றன. மொத்தம் 7,172 ரயில் நிலையங்களை இந்த ரயில்கள் கடந்து செல்கின்றன.
- குறைவான பயண கட்டணங்களால் ரயில்வே நிர்வாகத்துக்கு ஆண்டுதோறும் ரூ26 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படுகிறது.
- ரயில்வே வருவாயில் 67% சரக்கு கட்டணங்கள் மூலம் கிடைக்கிறது.
- நாள்தோறும் 26.5 லட்சம் டன் சரக்குகளை ரயில்வே கையாள்கிறது
- ரயில்வே துறையின் ஆண்டு வருமானம் என்பது ரூ1.40 லட்சம் கோடியாகும். இது பொதுத்துறை நிறுவனங்களான ஐ.ஓ.சி., ஓ.என்.சி.ஜி. ஆகியவற்றின் வருவாயை விட குறைவானது.
- கிடப்பில் உள்ள 359 ரயில்வே திட்டங்களை நிறைவேற்ற ரூ1.82 லட்சம் கோடி தேவை
- கடந்த 30 ஆண்டுகளில் அனுமதிக்கப்பட்ட 676 திட்டங்களில் 317 திட்டங்களே நிறைவேற்றப்பட்டுள்ளன. நிறைவேற்றப்பட்ட திட்டங்களின் மதிப்பு ரூ1.58 லட்சம் கோடி.
- அடுத்த 3 முதல் 4 ஆண்டுகளில் ரயில்வே துறைக்கு தேவையான முதலீடு என்பது ரூ6 லட்சம் கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது.
- ரயில்வே திட்டங்களை நிறைவேற்ற மத்திய அரசிடம் ரூ50 ஆயிரம் கோடியை ரயில்வே நிர்வாகம் கேட்கக் கூடும். இது இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியைவிட 0.5% குறைவு
- ஆண்டுதோறும் 200 கி.மீ. ரயில் பாதை புதிதாக இணைக்கப்படுகிறது. கடந்த 67 ஆண்டுகளில் மொத்தம் 13 ஆயிரம் கி.மீ ரயில் பாதைகளே இணைக்கப்பட்டுள்ளன. இந்தியா உலகிலேயே 4வது மிகப் பெரிய ரயில் பாதை கொண்ட நாடு. மொத்தம் 64,460 கி.மீ. தொலைவு ரயில் பாதைகளைக் கொண்டுள்ளது.
- ரயில்வே துறையில் மட்டும் 13.1 லட்சம் பேர் பணியாற்றுகின்றனர். இந்தியாவில் அதிக அளவு ஊழியர்கள் பணியாற்றும் துறையும் ரயில்வே துறைதான்.
More From
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications