சிக்கன் சாப்பிடனும்.. ஒரு வாரம் லீவு கேட்ட ரயில்வே ஊழியர்.. வைரல் கடிதம்!

Subscribe to Oneindia Tamil

சத்தீஸ்கர்: சிக்கன் சாப்பிடுவதற்காக ஒரு வாரம் விடுமுறை வேண்டும் என ரயில்வே ஊழியர் ஒருவர் எழுதிய விடுமுறை விண்ணப்ப கடிதம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

உடல்நலக் குறைவு, வீட்டில் ஏதேனும் விசேஷம், திருவிழா, குடும்பத்தோடு சுற்றுலா போவது என பல காரணங்களுக்காக நாம் விடுமுறை கேட்டு நமது உயரதிகாரிக்கு கடிதம் கொடுப்போம்.

Railway employee's letter seeking leave to 'eat chicken' is a hit on social media

உடல் நிலை சரியில்லை, வீட்டில் விசேஷம், திருவிழா, சுற்றுலா என நாம் பணிபுரியும் நிறுவனங்களில் விடுமுறை கேட்பது வழக்கம். அதையும் தாண்டி சிலர் கிரிக்கெட் மேட்ச் பார்ப்பதற்காக வேறு எதாவது காரணத்தை கூறி விடுமுறை கேட்பார்கள். ஆனால் சிக்கன் சாப்பிட வேண்டும் எனக் கூறி சத்தீஸ்கர் மாநிலம், பிலாஸ்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த பங்கஜ் ராஜ் என்பவர் மிகவும் வித்தியாசமாக விடுமுறை கேட்டுள்ளார்.

ரயில்வேயில் பணிபுரியும் இவர், உயர் அதிகாரிக்கு கடந்த ஜூன் 17ல் ஒருவாரம் விடுமுறை வேண்டி விண்ணப்பம் அளித்தார். அதில், புனித ஷ்ரவான் மாதம் ஒருவாரத்தில் தொடங்க இருக்கிறது. அந்த மாதம் தொடங்கினால் என்னால் கோழி இறைச்சி உணவை எடுத்துக் கொள்ள முடியாது. எனவே, ஷ்ரவான் மாதம் தொடங்குவதற்கு முன்பாக கோழி இறைச்சி உணவை எடுத்துக் கொள்ள ஒரு வாரம் விடுமுறை அளிக்க வேண்டும் என அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார். தற்போது இந்த கடிதம் சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+