பெங்களூரில் தினமும் மாலையில் கொட்டும் மழை.. ஆபீஸிலிருந்து வீடு திரும்புவோர் நிலை அந்தோ பரிதாபம்
பெங்களூர்: பெங்களூர் நகரத்தில் தினமும் மாலையில் பெய்யும் மழையால் அலுவலகத்தில் இருந்து வீடு திரும்புவோர் அவஸ்தைபடுகிறார்கள்.
மழைக்காலம் ஆரம்பித்தது முதல் அடை மழை கொட்டித் தீர்த்த பெங்களூரில், கடந்த ஒரு வாரமாக மழை இன்றி வானம் மேக மூட்டத்தோடு காணப்பட்டது. இந்நிலையில், நேற்று மாலையில் 5.30 மணியளவில் திடீரென பலத்த மழை கொட்டியது. 15 நிமிடமே நீடித்தபோதிலும், நகரத்தில் டிராபிக் ஜாமை உருவாக்கியது இந்த மழை.

இதேபோல இன்று, மாலை 5.30 மணியளவில் வானில் கரு மேகங்கள் திரண்டு வந்து கடும் மழை கொட்டியது. வாகன ஓட்டிகள் மழையில் சிக்கி அவதிப்பட்டனர். ஆபீசிலிருந்து வீடு திரும்பியோர் பைக்குகளை சாலையோரம் நிறுத்திவிட்டு கடைகள், ஹோட்டல்களில் தஞ்சம் அடைந்தனர்.
15 நிமிடமே நீடித்த போதும், மழையினால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதன்பிறகும் குளுகுளு வானிலை நிலவி வருகிறது.












Click it and Unblock the Notifications