மோடி நான் சொல்வதை எல்லாம் கேட்கிறார், எனக்கு எதற்கு அமைச்சர் பதவி?: சு.சாமி
புவனேஸ்வர்: நான் என்ன கூறினாலும் ராஜா(மோடி) செவிமடுக்கிறார் என்று பாஜக தலைவர் சுப்பிரமணியன் சாமி தெரிவித்துள்ளார்.
ஒரிஸா தலைநகர் புவனேஸ்வரில் உள்ள பல்கலைக்கழக விழாவில் கலந்து கொள்ள பாஜக தலைவர் சுப்பிரமணியன் சாமி ஞாயிற்றுக்கிழமை வந்தார். அப்போது அவரிடம் செய்தியாளர்கள், மோடி அமைச்சரவையில் இல்லாதது உங்களுக்கு வருத்தமாக இல்லையா என்று கேட்டனர்.

அதற்கு அவர் கூறுகையில்,
என்னை பார்த்தால் கவலையாகவா தெரிகிறது? நான் பயணம் செய்து கொண்டே இருக்கிறேன். நேற்று கொல்கத்தாவுக்கு சென்றேன், இன்று இங்கு வந்துள்ளேன். பதவிக்கு ஏங்குவது எல்லாம் ஆங்கிலேயர்களின் மனநிலையாகும். இந்திய பிராமணர்களும், கற்றறிந்தவர்களும் எந்த பதவியிலும் இருந்தது இல்லை. இருப்பினும் ராஜாக்கள் அவர்கள் சொல்வதை கேட்பார்கள்.
நான் எந்த விஷயம் பற்றி ஏதாவது கூறினாலும் ராஜா(மோடி) கேட்கிறார். என் நிலைமை அவ்வாறு உள்ளது. நான் அமைச்சராக ஆகியிருந்தால் ஒரு துறைக்குள் அடங்கியிருப்பேன். ஆனால் தற்போது நான் அனைத்து அமைச்சகங்கள் பற்றியும் பேச முடியும். எனக்காக வருத்தப்படாதீர்கள். ஒரிஸா விழாவில் கலந்து கொள்ளாமல் புதிய அமைச்சர்கள் பதவியேற்கும் விழாவுக்கு வருமாறு அழைத்தார்கள். இது நான் ஏற்கனவே ஒப்புக் கொண்ட நிகழ்ச்சி அதனால் கண்டிப்பாக பங்கேற்க வேண்டும் என்று தெரிவித்துவிட்டேன்.
அதனால் தான் பதவியேற்பு விழாவுக்கு செல்லாமல் இங்கு வந்துள்ளேன் என்றார்.
-
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் நிகழ்த்திய தமிழ்நாட்டு மாடல்.. கரப்பான் பூச்சி பார்ட்டியால் நிகழ்ந்தால் பாஜகவிற்கு சிக்கல் -
என் வீட்டு கண்ணுக்குட்டி.. என்னோட மல்லுக்கட்டி! மோடி அரசை முதன்முறையாக எதிர்த்த அண்ணாமலை! என்னாச்சு? -
புதுச்சேரியில் அமைச்சர்கள் நியமனம்.. முதல்வர் ரங்கசாமியுடன் கருத்து வேறுபாடு? நமச்சிவாயம் விளக்கம் -
2 நாள் பயணமாக டெல்லி புறப்பட்டார் முதல்வர் விஜய்.. இன்று மோடியுடன் சந்திப்பு.. பக்காவாக ரெடியான மனு! -
மேற்கு வங்க மறு தேர்தலில் அசத்தி காட்டிய பாஜக! 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி! -
ஏன் பெட்ரோல் விலை 10 நாளில் ரூ.7 உயர்வு? நஷ்டத்தை சொல்லுவீங்களா? மத்திய அரசை சாடிய மாணிக்கம் தாகூர் -
குடிசைகள் இல்லாத நகரமாக மாறும் மும்பை.. 2030 தான் டார்கெட்! ஏக்நாத் ஷிண்டே அறிவிப்பு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க












Click it and Unblock the Notifications