Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மேகாலயா ஹனிமூன் கொலை.. ரகுவன்ஷி தலைக்கு பின்னாலிருந்து விழுந்த முதல் அடி! விசாரணையில் ஷாக் மேல் ஷாக்

Subscribe to Oneindia Tamil

போபால்: இந்தூர் நகரைச் சேர்ந்த தொழிலதிபர் ராஜா ரகுவன்ஷி கொலை வழக்கில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ராஜா ரகுவன்ஷியின் பிரேத பரிசோதனை குறித்த தகவல்கள் இப்போது வெளியாகியுள்ளது. அதில் சொல்லப்பட்டது என்ன.. அங்கே என்ன நடந்தது என்பது குறித்து நாம் பார்க்கலாம்.

மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த ராஜா ரகுவன்ஷி- சோனம் ரகுவன்ஷி ஜோடிக்கு கடந்த மே 11-ம் தேதி திருமணம் நடந்துள்ளது. திருமணம் முடிந்த உடன் ராஜா ரகுவன்ஷியும், சோனம் ரகுவன்ஷியும் மே 20ம் தேதி தேனிலவுக்காக மேகாலயாவுக்குச் சென்றனர். அங்கு வைத்து தொழிலதிபர் ராஜா ரகுவன்ஷி கொல்லப்பட்டார்.

Raja Raghuvanshi Honeymoon Murder Autopsy Reveals Fatal Head Injuries

பிரதேச பரிசோதனையில் ஷாக்

இதற்கிடையே இந்தூர் நகரைச் சேர்ந்த தொழிலதிபர் ராஜா ரகுவன்ஷி கொலை வழக்கில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ராஜா ரகுவன்ஷியின் உடலுக்கு நடத்தப்பட்ட பிரேதப் பரிசோதனையில் அவரது தலையின் பின்பக்கமும், முன்பக்கமும் தாக்கப்பட்ட காயங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தலையில் முன் பக்கமும் பின் பக்கமும் கூர்மையான ஆயுதங்களால் தாக்கப்பட்டது தெரிய வந்துள்ளது.

இந்த கொலையை அவரது மனைவி சோனம் ரகுவன்ஷி, அவரது காதலன் ராஜ் குஷ்வாஹா உள்ளிட்டோர் செய்துள்ளனர். ராஜா-சோனம் தம்பதி மேகாலயாவுக்கு ஹனிமூன் சென்றிருந்தபோது திட்டமிட்டு படுகொலை செய்துள்ளனர்.

சோனம் ரகுவன்ஷி

சோனம் ரகுவன்ஷி உத்தரப் பிரதேச மாநிலம் காசிபூரில் உள்ள நந்த்கஞ்ச் காவல் நிலையத்தில் சரணடைந்தார். மேலும், இந்த கொலைக்கு உதவிய மூன்று குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் இருவர் மத்தியப் பிரதேசத்தின் இந்தூரைச் சேர்ந்தவர்கள். மற்றொருவர் உத்தர பிரதேசத்தின் லலித்பூரைச் சேர்ந்தவர். இன்று மத்தியப் பிரதேசத்தின் சதார் மாவட்டத்தில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

ராஜா ரகுவன்ஷியும், சோனம் ரகுவன்ஷியும் மே 23-ம் தேதி மேகாலயாவின் கிழக்கு காசி ஹில்ஸில் தேனிலவுக்காகச் சென்றிருந்தபோது திடீரென மாயமானார்கள்.. சுமார் 10 நாட்கள் கழித்து ஜூன் 2ம் தேதி ராஜா ரகுவன்ஷியின் உடல் பள்ளத்தாக்கில் கண்டுபிடிக்கப்பட்டது. சோனம் ரகுவன்ஷி மாயமானார்.

சுற்றுலா வழிகாட்டி சொன்ன தகவல்

மேகாலயாவில் சுற்றுலா வழிகாட்டியாக இருந்த ஆல்பர்ட் படே என்பவர் தான் இந்த தம்பதியை கடைசியாகப் பார்த்துள்ளார். ராஜா ரகுவன்ஷி, சோனம் ரகுவன்ஷி ஆகியோர் மேவ்லாகியாத் பகுதியில் உள்ள நோங்ரியாட் என்ற இடத்திற்குக் கடைசியாகப் போய் இருக்கிறார்கள். நோங்ரியாட் இரட்டை அடுக்கு பாலம் பிரபலமான சுற்றுலாத் தலமாகும். ஆல்பர்ட் படே அவர்களை நோங்ரியாட் அழைத்துச் செல்ல முன்வந்தபோது, அவர்கள் அதை மறுத்துவிட்டு வேறொரு வழிகாட்டியிடம் சென்றதாகக் கூறப்படுகிறது. அன்றைய தினமே ராஜா ரகுவன்ஷியும், சோனம் ரகுவன்ஷியும் காணாமல் போயுள்ளனர்.

போலீஸ் விசாரணை

ரகுவன்ஷியின் உடல் வைசாவ்டோங் நீர்வீழ்ச்சிக்கு அருகிலுள்ள பள்ளத்தாக்கில் கண்டுபிடிக்கப்பட்டது. அவரது உடலில் இருந்து தங்க மோதிரம் மற்றும் செயின் காணாமல் போய் இருந்தது. இதனால் இந்தச் சம்பவம் கொலையாக இருக்கலாம் என்ற சந்தேகத்தை போலீசாருக்கு ஏற்படுத்தியது. மறுநாள், ரத்தக்கறை படிந்த கத்தி ஒன்று அருகிலேயே கண்டுபிடிக்கப்பட்டது. இரண்டு நாட்களுக்குப் பிறகு, தம்பதியினர் பயன்படுத்திய ரெயின்கோட் ஒன்று ராஜாவின் உடல் கண்டுபிடிக்கப்பட்ட இடத்திற்கு அருகே உள்ள மாவ்க்மா கிராமத்தில் இருந்து மீட்கப்பட்டது.

தேடுதல் வேட்டை

மே 22-ம் தேதி வாடகைக்கு எடுக்கப்பட்ட ஸ்கூட்டர் இரு நாட்கள் கழித்து மே 24ம் தேதி ஷில்லாங்கிலிருந்து சோஹ்ரா செல்லும் சாலையில் உள்ள ஒரு கபே அருகே கண்டுபிடிக்கப்பட்டது. இதன் பின்னரே தேடுதல் வேட்டை தீவிரமடைந்தது. அதன் பிறகே இந்த கொலையில் திருப்பம் மேல் திருப்பம் அரங்கேறி வருகிறது. இந்த வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணையில் மேலும் பல உண்மைகள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+