"பின்னாலேயே சென்ற 'அந்த' இளைஞர்கள்.." ஹனிமூன் கொலை.. வழிகாட்டி சொன்ன முக்கியமான மேட்டர் இதுதான்!
போபால்: ராஜா ரகுவன்ஷி கொலை வழக்கில் அவரது மனைவி சோனம் ரகுவன்ஷி கைது செய்யப்பட்டுள்ளார். அவர்கள் வழக்கில் சினிமாவுக்கு இணையாக பல்வேறு திருப்பங்கள் அரங்கேறி வருகிறது. இதற்கிடையே தொழிலதிபர் ராஜா ரகுவன்ஷி கொலை வழக்கில் டூரிஸ்ட் கைட் ஒருவர் கொடுத்த வாக்குமூலமே வழக்கைத் தீர்க்க உதவியுள்ளது. இது குறித்து நாம் பார்க்கலாம்.
மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த ராஜா ரகுவன்ஷி-சோனம் ரகுவன்ஷி ஜோடிக்கு கடந்த மே 11ம் திருமணம் நடந்தது. அந்த ஜோடி மே 20ம் தேதி தேனிலவுக்காக மேகாலயாவுக்குச் சென்ற நிலையில், அங்கு வைத்து தொழிலதிபர் ராஜா ரகுவன்ஷி கொல்லப்பட்டார். இந்த விவகாரத்தில் சோனம் கைது செய்யப்பட்டுள்ளார்.

சுற்றுலா வழிகாட்டி
இந்த கொலையில் ராஜா ரகுவன்ஷியை உயிருடன் பார்த்த கடைசி நபர் என்று கருதப்படும் சுற்றுலா வழிகாட்டி சொன்ன வாக்குமூலம் தான் விசாரணையில் முக்கிய திருப்பமாக அமைந்தது. அவர் அளித்த வாக்குமூலமே அந்த கொடூரமான கொலையில் மூன்று பேர் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தை போலீசாருக்கு ஏற்படுத்தியது.
இந்த வழக்கு விசாரணை கிட்டதட்ட சினிமா படம் அளவுக்குப் பல திருப்பங்களைக் கொண்டது. கூலிப்படை, காதல் விவகாரம் என ஏகப்பட்ட திருப்பங்களைக் கொண்டதாகவே இருக்கிறது. மே 23ஆம் தேதி காலை 10 மணியளவில் மத்தியப் பிரதேசத்தின் இந்தூரில் இருந்து மேகாலயா சென்ற ராஜா மற்றும் அவரது மனைவி சோனம், மேகாலயாவின் மவ்லாகியாட்டில் காணப்பட்டனர். ராஜா கடைசியாக உயிருடன் காணப்பட்டது அன்றைய தினம் தான். அங்கு இருந்த அல்பர்ட் படே என்ற உள்ளூர் வழிகாட்டி, முதல் நாள் அங்குள்ள லிவ்விங் ரூட் பாலத்திற்கு அழைத்துச் சென்றார்.
இந்தி இளைஞர்கள்
அவர் கூறியுள்ள தகவல்களே விசாரணையில் முக்கியமானதாக உள்ளது. அங்கு ராஜா மற்றும் சோனமை வேறு மூன்று பேருடன் பார்த்ததாக உள்ளூர் போலீசாரிடம் அல்பர்ட் படே தெரிவித்தார். அவர்கள் உள்ளூர்வாசிகள் இல்லை என்றும், மூவரும் இந்தியில் பேசிக் கொண்டதாகும் அவர் கூறினார். சுற்றுலா வழிகாட்டியான அல்பர்ட் படே கூறுகையில், "ராஜா மற்றும் சோனமை மூன்று பேருடன் பார்த்தேன். அவர்கள் இந்தியில் பேசிக்கொண்டிருந்தனர்" என்றார்.
இதுவே விசாரணையை விரிவுபடுத்த உதவியதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ராஜா கொலை வழக்கில் விக்கி, ஆகாஷ் மற்றும் ஆனந்த் ஆகிய மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் கூலி படையினராக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். சோனம் தனது கணவர் ராஜா ரகுவன்ஷியை கொலை செய்யக் கூலிப்படையை ஏவியதாக போலீசார் சந்தேகிக்கின்றனர்.
பின்னணி
சோனம், தனது நீண்ட நாள் காதலனான ராஜ் குஷ்வாவுடன் தொடர்ந்து உறவில் இருக்க விரும்பியுள்ளார். இதன் காரணமாகவே திருமணம் ஆகி ஒரு வாரம் கூட ஆகாத நிலையில், தனது கணவரைக் கொலை செய்ததாகக் கூறப்படுகிறது. குஷ்வாதான் இந்த கொலைக்கு மூளையாகச் செயல்பட்டதாகவும் போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
மே 21-ஆம் தேதி ராஜா மற்றும் சோனம் ரகுவன்ஷி ஷில்லாங்கில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் அறை எடுத்துத் தங்கினர். மே 22-ஆம் தேதி அவர்கள் ஒரு டூவீலரை வாடகைக்கு எடுத்து சோஹ்ராரிம் நோக்கிப் புறப்பட்டனர். அன்று மாலை மவ்லாகியாட் என்ற பகுதியை அடைந்தபோது, ஷிபரா ஹோம்ஸ்டேக்கு அழைத்துச் செல்ல ஒரு வழிகாட்டியை அணுகியுள்ளனர். அதற்கு மறுநாள் தான் அந்த தம்பதியுடன் இந்தி பேசும் 3 நபர்கள் செல்வதை அலபர்ட் பார்த்துள்ளார்.
ஆல்பர்ட்
அல்பர்ட் தான் ராஜாவைக் கடைசியாக உயிரோடு பார்த்திருக்கிறார். அதன் பிறகு ராஜா மற்றும் சோனம் ஜோடி மாயமானதாகப் புகார் அளிக்கப்பட்டது. அவர்கள் வாடகைக்கு எடுத்த டூவீலர் மவ்லாகியாட் பார்க்கிங்கில் இருந்து ஏழு கிலோமீட்டர் தொலைவில் உள்ள சோஹ்ராரிம் பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.
ஒரு வாரம் கழித்தே ராஜாவின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது. அவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டதற்கான ஆதாரங்கள் இருந்தன. ரத்தக்கறை படிந்த கத்தியும் அருகிலேயே கண்டுபிடிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து அவரது ரத்தக்கறை படிந்த ரெயின்கோட்டும் பக்கத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.
-
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
ஆலங்குளம் அருகே 6 பேர் அரிவாளால் வெட்டப்பட்ட வழக்கில் ஷாக்.. ஒருவரை சுட்டுப் பிடித்தது போலீஸ்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications