பலத்த எதிர்ப்புகளுக்கு மத்தியில் திருப்பதி வந்தார் ராஜபக்சே.. சித்தூர் கலெக்டர் வரவேற்பு!
திருப்பதி : பலத்த எதிர்ப்புகளுக்கிடையே திருப்பதி வந்து சேர்ந்துள்ளார் இலங்கை அதிபர் ராஜபக்சே.
இலங்கையில் இருந்து தனி விமானம் மூலம் ரேனிகுண்டா வந்திறங்கிய ராஜபக்சே, அங்கிருந்து தனி விமானம் மூலம் திருப்பதி சென்றார். சித்தூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர் ஆகியோர் ராஜபக்சேவுக்கு வரவேற்பு அளித்தனர்.

ராஜபக்சே வருகையை ஒட்டி திருப்பதி முழுவதும் பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ரேணிகுண்டா விமான நிலையம், திருப்பதி மலைப்பாதைகள், வராக சுவாமி கோயில், தங்க ரதம் இருக்கும் பகுதி உள்ளிட்ட இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அனைத்து இடங்களிலும் வாகன தணிக்கை தீவிரமாக நடைபெற்று வருகிறது.
விரைவில் நடைபெற உள்ள இலங்கை அதிபர் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற வேண்டும் என்ற பிரார்த்தனை செய்வதற்காக ராஜபக்சே திருப்பதி வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இன்று இரவு ஏழுமலையான் கோவிலுக்கு சென்று பிரார்த்தனை நடத்தும் ராஜபக்சே, நாளை காலை 9 மணி அளவில் திருப்பதியில் இருந்து கிளம்ப உள்ளதாகத் தெரிகிறது.
பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், ராஜபக்சேவின் வருகையால் திருப்பதியில் பரபரப்பான சூழல் நிலவுகிறது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications