ராஜஸ்தான் மாநிலத்தில் கோர விபத்து.. லாரி மீது மோதிய வேன்.. சுற்றுலா சென்ற 18 பேர் பலி!
ஜோத்பூர்: ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் பகுதியில் பாரத் மாலா விரைவுச் சாலையில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது டெம்போ டிராவலர் வேன் ஒன்று மோதியதில் 18 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜோத்பூரில் இருந்து 220 கி.மீ தொலைவில் அமைந்துள்ள கோயில் ஒன்றுக்கு டெம்போ டிராவலரில் திரும்பிக் கொண்டிருந்த போது, பாரத் மலா தேசிய நெடுஞ்சாலையில் இந்த கோர விபத்து நடந்ததாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பிகானரில் இருந்து சுற்றுலாப் பயணிகளுடன் வந்த பேருந்து, பலோடி மாவட்டத்தின் பாபினி கிராமத்தில் நின்று கொண்டிருந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.

அதிவேகமாக வந்த டெம்போ டிராவலர் வேன், சாலை ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரியின் பின்புறம் மோதியுள்ளது. இதில் வேன் முற்றிலுமாக உருக்குலைந்தது. இந்த விபத்தில் சிக்கி 18 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 2 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
அந்த நேரத்தில் சாலையில் சென்று கொண்டிருந்தவர்கள் உடனடியாக காவல்துறைக்கு தகவல் கொடுத்ததன் பேரில், அங்கு வந்த போலீசார், மீட்புக் குழுவினர் வேனுக்குள் சிக்கியிருந்த உடல்களையும், காயம் அடைந்தவர்களையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்தக் கோர விபத்தில் இறந்தவர்களின் உடல்கள் நொறுங்கிய வாகனத்தின் சீட்களுக்கு இடையே சிக்கி இருந்ததால் மீட்புப் பணியில் கடும் சிரமம் ஏற்பட்டது. காயமடைந்தவர்களுக்கு ஜோத்பூரில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தச் சம்பவம் குறித்து போலீஸ் கமிஷ்னர் ஓம் பிரகாஷ் பாஸ்வான் கூறுகையில், "சிலர் பரிதாபமாக உயிரிழந்தனர். காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்து வருகிறோம். காயமடைந்தவர்களுக்கு சரியான மருத்துவ சிகிச்சை பெறக்கூடிய வசதி ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. காயமடைந்தவர்களின் உயிரைக் காப்பாற்றுவதில் நிர்வாகம் கவனம் செலுத்துகிறது." என்றார்.
இந்தச் சம்பவம் குறித்து ராஜஸ்தான் முதலமைச்சர் பஜன் லால் ஷர்மா இரங்கல் தெரிவித்துள்ளார். "இந்த துயரமான நேரத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசு உறுதுணையாக இருக்கும்" என்று தெரிவித்துள்ளார். இந்த விபத்து குறித்து இரங்கல் செய்தி வெளியிட்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் நிவாரணம் அறிவித்துள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications