ஆரம்பமே 'அமர்க்களம்'!பாஜக தேர்தல் குழுக்களில் வசுந்தர ராஜே சிந்தியா புறக்கணிப்பு- ஆதரவாளர்கள் ஷாக்!
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநில சட்டசபை தேர்தலுக்கான 2 குழுக்களை பாஜக மேலிடம் அறிவித்துள்ளது. இந்த 2 தேர்தல் குழுக்களிலும் முன்னாள் முதல்வர் வசுந்தர ராஜே சிந்தியா புறக்கணிக்கப்பட்டிருப்பதால் அவரது ஆதரவாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
ராஜஸ்தான் மாநில சட்டசபைக்கான தேர்தல் இந்த ஆண்டின் இறுதியில் நடைபெற உள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தின் ஆளும் காங்கிரஸ் அரசுக்கு எதிரான அதிருப்தி அலை, காங்கிரஸில் நீடிக்கும் உட்கட்சி மோதல் ஆகியவை பாஜகவுக்கு சாதகம் என கூறப்பட்டு வருகிறது. இதனால் ராஜஸ்தானில் எப்படியும் ஆட்சி தங்கள் வசமாகும் என கனவு காண்கிறது பாஜக.

இந்நிலையில் ராஜஸ்தான் மாநில சட்டசபை தேர்தலுக்கான இரு குழுக்களை பாஜக மேலிடம் இன்று அறிவித்தது. தேர்தல் நிர்வாக குழு, தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு ஆகிய இரு குழுக்களை பாஜக மேலிடம் இன்று அறிவித்தது. 21 பேரை கொண்ட தேர்தல் நிர்வாகக் குழுவுக்கு முன்னாள் எம்பி நாராயணன் பஞ்சாரியா தலைமை வகிப்பார்; தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவுக்கு மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் தலைமை வகிப்பார் என்பது பாஜக மேலிடத்தின் அறிவிப்பு.
ஆனால் ராஜஸ்தான் சட்டசபை தேர்தல் தொடங்கப்பட்ட உடனேயே பாஜகவில் புகைச்சலும் அதிருப்தியும் வெடித்துள்ளது. பாஜக மேலிடம் அறிவித்த இந்த இரு குழுக்களிலும் ராஜஸ்தான் மாநிலத்தின் பாஜக முகமான முன்னாள் மத்திய அமைச்சர் வசுந்தரராஜே சிந்தியா பெயர் இடம்பெறவில்லை. இது அவரது ஆதரவாளர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், வசுந்தர ராஜே சிந்தியா இடையேயான மறைமுகமான ஒப்பந்தத்தால் அவரது ஆட்சிக் கால ஊழல்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என குற்றச்சாட்டை முன்வைத்தவர் காங்கிரஸ் மூத்த தலைவர் சச்சின் பைலட். இதற்காக போராட்டங்களையும் கூட சச்சின் பைலட் நடத்தி இருந்தார். இது பாஜகவுக்கு சாதகமான அம்சமாக இருந்தாலும் அசோக் கெலாட்டுடன் திரைமறைவில் வசுந்தரராஜே சிந்தியா கை கோர்த்து செயல்பட்டதை பாஜக மேலிடம் ரசிக்கவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில் ராஜஸ்தான் சட்டசபை தேர்தலுக்கான குழுக்களில் வசுந்தரராஜே சிந்தியா ஓரம் கட்டப்பட்டிருப்பது அவரது ஆதரவாளர்களால் ஏற்க முடியவில்லை எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன்












Click it and Unblock the Notifications