ராஜஸ்தான்: எடியூரப்பா, சிவராஜ்சிங் சவுகான் வரிசையில் வசுந்தர ராஜே? 'அத்தியாய'த்தை முடிக்கும் பாஜக?
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் சட்டசபை தேர்தலில் முன்னாள் முதல்வரும் மூத்த பாஜக தலைவருமான வசுந்தர ராஜே சிந்தியாவை ஓரம்கட்டுவது என்கிற முடிவில் பாஜக மேலிடம் உறுதியாக உள்ளதாக கூறப்படுகிறது. இருந்த போதும் பெரும் பிளவை எதிர்கொள்ளாமல் இருக்க வசுந்தர ராஜே ஆதரவாளர்களுக்கு சீட் வழங்கப்படும் என பாஜக மேலிடம் உறுதி அளித்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தான் மாநில சட்டசபைக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. ராஜஸ்தான் தேர்தல் தொடர்பாக குழுக்களில் வசுந்தர ராஜே சிந்தியா புறக்கணிக்கப்பட்டார். இதற்கு பதிலடியாக பாஜகவின் பாதயாத்திரையின் தொடக்க நிகழ்வுகளை வசுந்தர ராஜே சிந்தியா புறக்கணித்தார்.

முதல்வர் வேட்பாளர் ஏமாற்றம்: அண்மையில் பிரதமர் மோடி, ராஜஸ்தானில் தேர்தல் பிரசாரம் செய்த போது தம்மை முதல்வர் வேட்பாளராக அறிவிப்பார் என்பது வசுந்தர ராஜே சிந்தியாவின் எதிர்பார்ப்பாக இருந்ததாம். ஆனால் பிரதமர் மோடியோ, தமது ஆட்சியின் சாதனைகளும் தாமரை சின்னமுமே முதல்வர் வேட்பாளர் என அறிவித்துவிட வசுந்தர ராஜே சிந்தியா அண்ட்கோ படு அப்செட்டானதாம். கடந்த சில நாட்களாக பாஜகவின் யாத்திரைகளில் தலைகாட்டி வருகிறார் வசுந்தர ராஜே சிந்தியா.

ம.பி. பார்முலா: இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தலைவர் ஜேபி நட்டா ராஜஸ்தான் மாநிலம் சென்று சட்டசபை தேர்தல் தொடர்பாக பல்வேறு ஆலோசனைகளை நடத்தினர். மத்திய பிரதேச சட்டசபை தேர்தல் பார்முலாவை அப்படியே ராஜஸ்தானிலும் பின்பற்றுவது என்பது பாஜகவின் திட்டமாம். அதாவது மத்திய அமைச்சர்கள், எம்.பிக்களை சட்டசபை தேர்தலில் களமிறக்கி வெற்றியை அறுவடை செய்வது என்பதில் பாஜக உறுதியாக உள்ளதாம். இது தொடர்பான ஆலோசனைகளைத்தான் அமித்ஷாவும் நட்டாவும் நடத்தினார்களாம்.
அமித்ஷாவின் சந்திப்பு: இதனிடையே வசுந்தர ராஜே சிந்தியாவையும் அமித்ஷா, நட்டா சந்தித்து பேசி இருக்கின்றனர். இந்த சந்திப்பின் போதும் முதல்வர் வேட்பாளர் குறித்த எந்த உறுதியும் தரப்படவில்லையாம். ஆனால் வசுந்தர ராஜே சிந்தியா பாஜகவில் பிரளயத்தை ஏற்படுத்திவிடக் கூடாது என்பதற்காக, அவரது ஆதராவளர்கள் பலருக்கு சீட் தரப்படும் என உறுதி அளிக்கப்பட்டுள்ளதாம்.

அதிருப்திக்கு என்ன காரணம்?: என்னதான் மூத்த தலைவராக வசுந்தர ராஜே சிந்தியா இருந்தாலும், ராஜஸ்தானில் ஆளும் காங்கிரஸ் அரசுடன் நெருக்கமான உறவில் இருப்பவர் என்கிற குற்றச்சாட்டு உண்டு. ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் அரசுக்கு எதிராக மூத்த காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட் போர்க்கொடி தூக்கி ஆட்சியை கவிழ்க்க முயற்சித்த போது, உதவியாக இருந்தார் வசுந்தர ராஜே என கெலாட்டே ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்த்தை பாஜக டெல்லி மேலிடம் ரசிக்கவில்லையாம். இதுதான் வசுந்தர ராஜே சிந்தியா மீதான அதிருப்திக்கு பிரதான காரணமாம்.

ஓரம் கட்டப்படும் வசுந்த ராஜே சிந்தியா?: ஏற்கனவே கர்நாடகாவில் எடியூரப்பா, மத்திய பிரதேசத்தில் சிவராஜ் சிங் சவுகான் என சீனியர்களை ஓரம் கட்டும் பாஜக அந்தப் பட்டியலில் ராஜஸ்தான் வசுந்தர ராஜே சிந்தியாவையும் சேர்த்துக் கொண்டிருக்கிறதாம். பாஜகவின் இந்த நகர்வுகளை உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருக்கும் வசுந்த ராஜே சிந்தியாவை 2024 லோக்சபா தேர்தல் வரை பாஜக மேலிடம் சீண்டிவிடக் கூடாது என்பதிலும் கவனமாக இருக்கிறதாம். ராஜஸ்தானில் 25 தொகுதிகளில் அவரது செல்வாக்கு முக்கிய காரணம். அத்துடன் எந்த ஜாதி ஓட்டுகளை எப்படி வசமாக்குவது என்கிற வித்தைக்குரியவர் வசுந்தர ராஜே என்கின்றனர்.
-
ராகுல் காந்தியை சந்திக்க டெல்லி போன.. சித்தராமையாவுக்கு டிவிஸ்ட்! தள்ளி போன மீட்டிங்! -
ராஜினாமா பண்ணிட்டா.. ஆட்டம் முடிஞ்சதுன்னு அர்த்தம் கிடையாது! எம்பி பதவியை உதறிய சித்தராமையா -
ஒட்டுமொத்த தென்னிந்திய அரசியலும் மாறிடுச்சு.. ஒரே மாதத்தில் ராகுல் எடுத்த 3 முடிவுகள்.. முக்கியம் -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அண்ணாமலை 'மும்மொழி' எதிர்ப்பு: நேபாளப் பயணம்... ரஜினியுடன் ரகசிய சந்திப்பா? விரைவில் புது கட்சி -
என் வீட்டு கண்ணுக்குட்டி.. என்னோட மல்லுக்கட்டி! மோடி அரசை முதன்முறையாக எதிர்த்த அண்ணாமலை! என்னாச்சு? -
விஜய் கொடுத்த ரியாக்ஷன்..! மோடி - விஜய் இடையே வெறும் 10 நிமிட சந்திப்பு..! பேசியது என்ன? -
மொத்தமாக காலியாகும் மம்தா கட்சி.. பாஜகவுக்கு தாவும் 50 திரிணாமுல் MLAகள்? 20 எம்பிக்களும் ராஜினாமா? -
ஒருவழியாக இறங்கி வந்த சித்தராமையா.. ஆனால் அடுத்த நொடியே வைத்த செக்! உச்சக்கட்ட டென்ஷனில் சிவக்குமார் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனை சந்தித்த விஜய்! நிதி விவகாரத்தில்.. தமிழ்நாடு வைத்த முக்கிய கோரிக்கை! -
நிர்மலா சீதாராமனை சந்திக்கும் விஜய்.. 20 நிமிடத்தை தாண்டுமா? மோடி சந்தித்த கையோடு அடுத்த முக்கிய அப்பாயின்மென்ட்!












Click it and Unblock the Notifications