பாஜக, காங்கிரஸ் ”சாமியார்” வேட்பாளர்கள் Vs முஸ்லிம் வேட்பாளர்கள்.. பரபரக்கும் ராஜஸ்தான் தேர்தல் களம்
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் சட்டசபை தேர்தலில் பாஜக 4 சாமியார்களை வேட்பாளர்களாகவும் காங்கிரஸ் 2 சாமியார்களையும் வேட்பாளர்களாகவும் களமிறக்கி உள்ளது. பாஜகவின் சாமியார் வேட்பாளர்களுக்கு எதிராக முஸ்லிம்களை காங்கிரஸ் வேட்பாளர்களாக களமிறக்கியிருப்பதால் அந்த தொகுதிகளில் பரபரப்பும் பதற்றமும் நிலவுகிறது.
ராஜஸ்தான் சட்டசபை தேர்தல் வரும் 25-ந் தேதி நடைபெறுகிறது. ராஜஸ்தானில் ஆளும் காங்கிரஸ், பாஜக இடையே கடும் போட்டி நிலவுகிறது. ராஜஸ்தான் தேர்தல் களத்தில் சாமியார் வேட்பாளர்களை பாஜகவும் காங்கிரஸும் நிறுத்தி உள்ளன.

தேவாஸி vs லோதா: ராஜஸ்தான் தேர்தல் களத்தில் பாஜக சார்பில் 4 சாமியார்கள் போட்டியிடுகின்றனர். இவர்களில் ஒருவர் ஒடாராம் தேவாஸி. சிரோஹி தொகுதியில் போட்டியிடும் இந்த சாமியார் ரபாரி ஜாதியை சேர்ந்தவர். சாமுண்டா மாதா கோவில் சாமியாரான தேவாஸிக்கு இன்னொரு பெயர் 'போபா ஜி'. 2013-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு வென்ற போபா ஜிக்கு அப்போதைய முதல்வர் வசுந்தர ராஜே சிந்தியா, பசு பாதுகாப்பு, மேம்பாட்டுத்துறை இலாகாவை ஒதுக்கினார். ஆனால் 2018-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியின் அதிருப்தி வேட்பாளரிடம் போபா ஜி தோல்வி அடைந்தார். இப்போது 3-வது முறையாக போபா ஜியை பாஜக களம் இறக்கியுள்ளது. அவருக்கு எதிராக காங்கிரஸ் கட்சியின் லோதா களத்தில் உள்ளார்.
பாலக்நாத் vs இம்ரான்கான்: ராஜஸ்தான் தேர்தல் களத்தில் உள்ள இன்னொரு சாமியார் பாபா பாலக்நாத். இவர் ஆல்வார் லோக்சபா தொகுதி எம்.பி. பாபா மஸ்நாத் மடத்தை சேர்ந்த சாமியார்தான் பாபா பாலக்நாத். திஜாரா தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரான இம்ரான்கானை எதிர்த்து போட்டியிடுகிறார் பாலக்நாத் சாமியார். தீவிர இந்துத்துவா கொள்கையை பின்பற்றக் கூடியவர் பாபா பாலக்நாத். இவருக்கு எதிராக முஸ்லிம் வாக்குகளை ஒருங்கிணைக்கும் வகையில் முஸ்லிம் வேட்பாளரை காங்கிரஸ் களமிறக்கி இருக்கிறது.
மஹந்த் பிரதாப் பூரி vs சலே முகம்மது: பாஜகவின் இன்னொரு 'சாமியார்' வேட்பாளர் தரதாரா மடம் மஹந்த் பிரதாப் பூரி. பொக்ரான் சட்டசபை தொகுதியில் இவரை எதிர்த்து காங்கிரஸ் கட்சியின் சலே முகம்மது போட்டியிடுகிறார். முதல்வர் அசோக் கெலாட் அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளவர் சலே முகம்மது. சிந்தி முஸ்லிம் சமூக மதகுருவாக போற்றப்படுகிறவர். 2018-ம் ஆண்டு சட்டசபை தேர்தலிலும் 1000 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக சாமியாரை தோற்கடித்தவர் சலே முகம்மது.
பிரகாஷ் மாலி: ஓபிசி சமூகமான மாலி ஜாதியை சேர்ந்த ஆன்மீக பாடகர் பிரகாஷ் மாலி, பாஜக சார்பில் பச்பத்ரா தொகுதியில் போட்டியிடுகிறார். காங்கிரஸ் கட்சி வேட்பாளர் மதன் பிரஜாபத்துடன் மோதுகிறார் பிரகாஷ் மாலி. 2008, 2018 தேர்தல்களில் வென்றவர் மதன் பிரஜாபத்.
முஸ்லிம் தொகுதியில் பால்முகுந்த்: பாஜகவினரே எதிர்பார்க்காத ஒரு சாமியார் வேட்பாளர் ஆச்சார்யா பால்முகுந்த். ஜெய்ப்பூரில் ஹவா மஹால் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இத்தனைக்கும் முஸ்லிம்கள் பெரும்பான்மை வாக்காளர்களாக உள்ள தொகுதி இது. இந்துத்துவா கொள்கைகளை தீவிரமாக பேசுபவர் என்றாலும் இவரை வேட்பாளராக அறிவித்ததில் பாஜகவில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
காங். சாமியார் வேட்பாளர்கள்: காங்கிரஸ் கட்சியும் சாமியார் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளது. காங்கிரஸில் சாத்வி ஆனதி சரஸ்வதி (அஜ்மீர் வடக்கு), ஆச்சார்யா சோமேந்திர ஷர்மாவின் மனைவி அர்ச்சனா ஷர்மா (மால்வியா நகர்) ஆகியோரும் வேட்பாளர்களாக களமிறக்கப்பட்டுள்ளனர்.
-
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி!












Click it and Unblock the Notifications