ராஜஸ்தான்: 13 தொகுதிகள்..காங்கிரஸை 'கதறவிடும்' ஓவைசி கட்சி- ஒரு முஸ்லிம் கூட பாஜக வேட்பாளர் இல்லை!
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் 13 தொகுதிகளில் ஓவைசியின் மஜ்லிஸ்ட் கட்சி வேட்பாளர்களை களமிறக்கி இருப்பதால் காங்கிரஸ் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளது. பாஜகவோ முஸ்லிம் ஒருவரை கூட வேட்பாளராக நிறுத்தாமல் தேர்தலை எதிர்கொண்டிருக்கிறது.
ராஜஸ்தான் மாநில சட்டசபை தேர்தல் வரும் 25-ந் தேதி நடைபெறுகிறது. ராஜஸ்தானில் ஆளும் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பாஜகவிடம் பறிகொடுக்கும் என்கின்றன பெரும்பாலான தேர்தல் கருத்து கணிப்புகள். ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசு மீதான அதிருப்தி, ராஜஸ்தான் காங்கிரஸில் ஓயாத உட்கட்சி பூசல்தான் காங்கிரஸின் தோல்விக்கு காரணமாக இருக்கும் என்பது வெளிப்படையான ஒன்று.

ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியை பறிகொடுத்தாலும் சுமார் 80% முஸ்லிம் வாக்குகளை சிந்தாமல் சிதறாமல் அள்ளும் என்பதும் தேர்தல் கருத்து கணிப்பு முடிவுகள். ஆனால் இதனை சிதறடிக்கும் வகையில் ஓவைசியின் மஜ்லிஸ் கட்சி 13 தொகுதிகளில் போட்டியிடுகிறது. முஸ்லிம், தலித் வாக்குகளை குறிவைத்து ஓவைசி கட்சி போட்டியிடுவது காங்கிரஸை கதிகலங்க வைத்திருக்கிறது.
தெலுங்கானா மாநில கட்சியான ஓவைசியின் மஜ்லிஸ்ட் கட்சி, ராஜஸ்தானில் கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் 4 லட்சம் பேரை உறுப்பினர்களாக சேர்த்திருக்கிறது. ராஜஸ்தான் முஸ்லிம் வாக்காளர்கள் இதுவரை காங்கிரஸ் பக்கம் திரும்பி இருந்தனர். ஆனால் ஓவைசி கட்சியோ முஸ்லிம் இளைஞர்கள், முஸ்லிம் சமூக பெரியவர்கள் என செலக்டிவ் பார்முலாவில் ராஜஸ்தானில் களமிறங்கி செயல்பட்டு வருகிறது. இதனால் முஸ்லிம் வாக்காளர்கள் காங்கிரஸுக்கா? ஓவைசி கட்சிக்கா? என்கிற குழப்பத்துக்கு இயல்பாகவே தள்ளிவிடப்பட்டுள்ளனர். மஜ்லிஸ் கட்சித் தலைவர் ஜமீல் கான் ஹவா மஹால் தொகுதியில் போட்டியிடுகிறார். இங்கு மொத்தம் 2.6 லட்சம் வாக்காளர்கள். இவர்களில் முஸ்லிம் வாக்காளர்கள் மட்டும் 1 லட்சத்துக்கும் அதிகமாகும்.
இன்னொரு பக்கம் பாஜக இம்முறை ஒரு முஸ்லிம் வேட்பாளரை கூட நிறுத்தவில்லை. இத்தனைக்கும் 2018 தேர்தலில் ஒரே ஒரு முஸ்லிம் வேட்பாளரை - யூனுஸ் கானை நிறுத்தியிருந்தது. தற்போதைய தேர்தலில் அவருக்கும் சீட் கொடுக்க மறுத்துவிட்டது பாஜக. இதனால் பாஜகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளருக்கு எதிராக சுயேட்சையாக போட்டியிடுகிறார் யூனுஸ் கான்.
-
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை?












Click it and Unblock the Notifications