ராஜஸ்தான் ரிசல்ட்டுக்கு பின் திக்.. திக்- பெங்களூரில் 2 ரிசாட்டுகளை ரெடி செய்த காங்.. கதறுதே பாஜக!
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநில சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்குவதற்கு முன்னரே கர்நாடகா மாநிலம் பெங்களூரில் எம்.எல்.ஏக்களை தங்க வைக்க 2 ஹோட்டல்களை காங்கிரஸ் கட்சி ஏற்பாடு செய்துவிட்டதாக பாஜகவின் கிரோதி லால் மீனா குற்றம் சாட்டியுள்ளார்.
ராஜஸ்தானில் மொத்தம் 200 தொகுதிகள் உள்ளன. 199 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியில் உள்ளது. ராஜஸ்தான் தேர்தல் முடிவுகள் தொடர்பான எக்ஸிட் போல் பெரும்பாலும் குழப்பமான கருத்தையே முன்வைத்துள்ளன. ராஜஸ்தானில் ஆளும் காங்கிரஸ் வெல்லும் என்றோ பாஜக ஆட்சியைக் கைப்பற்றும் என்றோ திட்டவட்டமாக எக்ஸிட் போல் முடிவுகள் சொல்லவில்லை.
ராஜஸ்தானில் காங்கிரஸும், பாஜகவும் சம பலத்திலான இடங்களைக் கைப்பற்றலாம். அதேநேரத்தில் பெரும்பான்மைக்கு ஒரு சில எம்.எல்.ஏக்கள் தேவைப்படும் என்கிற தொங்கு சட்டசபைக்கும் சாத்தியம் இருக்கிறது என்பதுதான் தேர்தல் கருத்து கணிப்புகளின் முடிவுகள்.
இந்த நிலையில் கர்நாடகாவில் ரிசார்ட் அரசியலை துணை முதல்வர் டிகே சிவகுமார் ஜரூராக தொடங்கியிருப்பதை நமது ஒன் இந்தியா தமிழ் இணைய தளம் முதலில் வெளியிட்டது. தற்போது ராஜஸ்தான் மாநில பாஜக மூத்த கிரோதி லால் மீனாவும் கூறியுள்ளார். இது தொடர்பாக கிரோதி லால் மீனா கூறுகையில், குதிரை பேர அரசியல், ரிசார்ட் அரசியல், எம்.எல்.ஏக்களை வளைத்துப் போடுவது என்பது காங்கிரஸுக்கு கை வந்த கலை. அதனால்தான் இப்போதே ராஜஸ்தான் மாநிலத்தில் வெல்லும் காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை தங்க வைக்க கர்நாடகா மாநிலம் பெங்களூரில் 2 ஹோட்டல்களை தயார் செய்து வைத்திருக்கிறது. ஆனால் ராஜஸ்தானில் பாஜகதான் 120 இடங்களுக்கும் மேலான இடங்களைக் கைப்பற்றும் என்றார்.
கடந்த காலங்களில் பிற மாநில காங்கிரஸ் அரசுக்கு அல்லது காங்கிரஸ் எம்.எல்.ஏக்களுக்கு பாஜகவால் ஆபத்து அல்லது நெருக்கடி ஏற்பட்டால் அம்மாநில எம்.எல்.ஏக்களை பாதுகாப்பாக கர்நாடகாவுக்கு அழைத்து வந்து தங்க வைத்து அரசியல் சூழ்நிலைகளை எதிர் கொள்வதை காங்கிரஸ் வழக்கமாக வைத்திருக்கிறது. தற்போதைய கர்நாடகா துணை முதல்வர் டிகே சிவகுமார் ரிசார்ட் அரசியலில் எக்ஸ்பர்ட். இம்முறையும் தமது ரிசார்ட் அரசியலை ஆரம்பித்து வைத்து ராஜஸ்தானில் புயலை கிளப்பி விட்டிருக்கிறார் டிகே சிவகுமார்.
-
காங்கிரசுக்கு ராஜ்யசபா எம்பி சீட் காலி? மீனாட்சி நடராஜனின் மனு.. உச்ச நீதிமன்றம் நிராகரித்தது ஏன்? -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்!












Click it and Unblock the Notifications