Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ராஜஸ்தானில் தேர்தலுக்கு முன் திடீரென இறந்த காங் வேட்பாளர்.. இனி அந்த தொகுதியில் என்ன நடக்கும்?

Subscribe to Oneindia Tamil

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் கரன்பூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் குர்மீத் சிங் கூனர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் அந்த தொகுதியில் என்ன நடக்கும் என்பதை இப்போது பார்ப்போம்.

ராஜஸ்தான் மாநிலத்தில் வரும் நவம்பர் 25ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. மொத்தம் உள்ள 200 தொகுதிகளுக்கும் ஒரே நாளில் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இந்நிலையில் அம்மாநிலத்தில் உள்ள கரன்பூர் சட்டமன்றத் தொகுதியில் தேர்தலில் போட்டியிட்ட குர்மீத் சிங் கூனர், கடந்த நவம்பர் 12ம் தேதி திடீரென உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அன்றே குர்மீத் சிங் கூனர் அனுமதிக்கப்பட்டார். சிறுநீரக நோய் தோற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற அவர் இன்று காலமானார்.

Rajasthan election 2023: Congress candidate Gurmeet Singh Kooner passed away

கரன்பூரில் மூன்று முறை எம்.எல்.ஏ.வாக இருந்த குர்மீத் சிங் கூனர், கரன்பூர் பகுதி காங்கிரஸின் வலுவான தலைவராக திகழ்ந்தார். கடந்த 1998 சட்டமன்றத் தேர்தலில் கரன்பூரில் இருந்து காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்ற அவர், 2008 இல் அந்தத் தொகுதியில் இருந்து சுயேட்சையாக வெற்றி பெற்றார். 2018 இல், காங்கிரஸ் அவரை மீண்டும் கரன்பூரில் நிறுத்தியது மற்றும் அவர் மீண்டும் வெற்றி பெற்றார்.

இப்போது நான்காவது முறையாக கரன்பூர் தொகுதியில் போட்டியிட்ட குர்மீத் சிங் கூனர் உடல்நலக்குறைவால் காலமாகி உள்ளார். இந்நிலையில் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 52வது பிரிவின்படி, வேட்புமனுத் தாக்கல் செய்வதற்கான கடைசித் தேதியில் வேட்பாளர் இறந்துவிட்டால், அவரது வேட்புமனு பரிசீலனையில் தள்ளுபடியாகும். அப்போது வாபஸ் பெறாத வேட்பாளர் இறந்துவிட்டால்; அல்லது போட்டியிடும் வேட்பாளர் வாக்குப்பதிவு தொடங்கும் முன் இறந்துவிட்டால், தேர்தல் நடத்தும் அலுவலர் வாக்குப்பதிவை ஒத்திவைப்பதாக அறிவித்து, தேர்தல் ஆணையத்திடம் தெரிவிப்பார். அதன்படி சட்டப் பேரவைக்கான வேட்பாளர் மரணம் அடைந்தால், அந்தத் தொகுதிக்கான தேர்தல் ரத்து செய்யப்பட்டு, குறிப்பிட்ட தொகுதிக்கான தேர்தலுக்கான தேதியை தேர்தல் ஆணையம் அறிவிப்பது வழக்கம்.

காங்கிரஸ் வேட்பாளர் குர்மீத் சிங் கூனர் மரணம் அடைந்ததால், விதிகளின்படி, ராஜஸ்தானில் உள்ள கரன்பூர் தொகுதிக்கு நவம்பர் 25ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறாது என்றே கூறப்படுகிறது. ராஜஸ்தானில் மீதமுள்ள 199 தொகுதிகளுக்கு நவம்பர் 25-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என்று தெரிகிறது. எனினும் அந்த தொகுதியில் தேர்தல் ரத்து செய்வது குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

கரன்பூர் தொகுதிக்கான தேர்தல் தேதி பின்னர் தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்படும். ராஜஸ்தான் மாநிலத்தில் மீதமுள்ள 199 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறும். வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 3-ம் தேதி நடந்து அன்று தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும்.

முன்னதாக 2018 ராஜஸ்தான் சட்டமன்றத் தேர்தலில், பகுஜன் சமாஜ் கட்சி (பிஎஸ்பி) வேட்பாளர் லக்ஷ்மண் சிங் மாரடைப்பால் இறந்ததால், அல்வார் மாவட்டத்தில் உள்ள ராம்கர் சட்டமன்றத் தொகுதிக்கான தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. 2018 தேர்தலில் 200 இடங்களுக்கு பதிலாக 199 இடங்களில் மட்டுமே வாக்குப்பதிவு நடந்தது.

அதேநேரம் வேட்பாளர் மரணம் அடைந்தாலும் தேர்தல் ஆந்திராவில 2014ம் ஆண்டு ரத்து செய்யப்படவில்லை. ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் (ஒய்எஸ்ஆர்சிபி) வேட்பாளர் பூமா ஷோபா நாகி ரெட்டி, 2014 இல் கர்னூல் மாவட்டத்தில் உள்ள அல்லகட்டாவில் போட்டியிட்டார் . ஆனால் தேர்தலுக்கு இரண்டு வாரம் முன்பு பூமா ஷோபா நாகி ரெட்டி சாலை விபத்தில் இறந்தார். சாலை விபத்தில் அவர் இறந்த போதும் தேர்தல் அப்போது ரத்து செய்யப்படவில்லை. அப்போது நடந்த தேர்தலில் இறந்து போன பூமா ஷோபா நாகி ரெட்டி தெலுங்கு தேசம் கட்சியின் (டிடிபி) ஜி பிரபாகர் ரெட்டியை கிட்டத்தட்ட 18,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து வென்றிருந்தார். தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட பின்னரே சட்டசபை தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட்டது.

2014ம் ஆண்டு ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக இல்லாததால் அந்த தொகுதிக்கான தேர்தலை தேர்தல் ஆணையம் ரத்து செய்யவில்லை. ஷோபா நாகி ரெட்டி பெயர் ஏற்கனவே வாக்கு இயந்திரத்தில் சேர்க்கப்பட்டிருந்தது. அவர் போட்டியிடும் வேட்பாளராக இருந்ததால் தேர்தல் ஆணையம் தேர்தலையும் நடத்தியது.. இதுபோன்ற சந்தர்ப்பங்களில் வேட்பாளர் வெற்றி பெற்றால் மட்டுமே இடைத்தேர்தல் நடத்தப்படும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+