வீடுகளுக்கு ‛டோர் டெலிவரி’.. தினம் 20 பசுவை கொன்று மாட்டிறைச்சி விற்பனை! பாய்ந்த புல்டோசர் ஆக்சன்
ஜெய்ப்பூர்: சட்டவிரோதமான காட்டுப்பகுதியில் தினமும் 20 பசுக்களை கொன்று வீடு, கடைகளுக்கு ‛டோர் டெலிவரி' முறையில் மாட்டிறைச்சி சப்ளை செய்து மாதம் லட்சக்கணக்கில் சம்பாதித்த 25 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் மாட்டிறைச்சி விற்பனை கூடம் புல்டோசரால் இடித்த தரைமறைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்துக்கு கடந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடந்தது. இதில் காங்கிரஸ் கட்சியை வீழ்த்தி பாஜக ஆட்சியை பிடித்தது. முதல்வராக பஜன் லால் சர்மா உள்ளார்.

இந்நிலையில் தான் ராஜஸ்தான் மாநிலம் ஆல்வார் அருகே காட்டுப்பகுதியில் சட்டவிரோதமாக பசு மாடுகள் வெட்டப்பட்டு மாட்டிறைச்சி விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்தது. மேலும் இங்கிருந்து ஏரளமான கிராமங்களுக்கு மாட்டிறைச்சி விற்பனை செய்யப்படுவதாக குற்றம்சாட்டப்பட்டது.
இதுதொடர்பாக வீடியோவும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து ஜெய்ப்பூர் ஐஜி உமேஷ் சந்திரா தத் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்த்தனர். பாஸ் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பிரசாங்பூர் அருகே ருந்த் எனும் பகுதியில் உள்ள கிட்வாடா எனும் காட்டுப்பகுதியில் பசுக்கள் கொல்லப்பட்டு தோல் நீக்கம் செய்யப்பட்டு இறைச்சியாக விற்பனை செய்யப்படுவது தெரியவந்தது. பெரிய மார்க்கெட் போன்று மாட்டிறைச்சி கூடம் செயல்பட்டது தெரியவந்தது.
இதையடுத்து அங்கிருந்தவர்களை கைது செய்ய போலீசார் முயன்றனர். போலீசாரை பார்ததவுடன் அங்கிருந்தவர்கள் ஓடிவிட்டனர். போலீசார் விரட்டி சென்றனர். இருப்பினும் யாரும் சிக்கவில்லை. இதையடுத்து கூடுதல் போலீசார் வரவைழக்கப்பட்டு அந்த பகுதியில் உள்ள புதர் பகுதிகளில் தேடும் பணி தொடங்கியது. ஆனால் யாரும் சிக்கவில்லை.
இதையடுத்து அந்த பகுதியில் இருந்த 12 மோட்டார் சைக்கிள்கள், ஜீப் உள்ளிட்டவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் மாட்டிறைச்சி, மாட்டுத்தோல், மாட்டு கொம்புகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுபற்றிய புகாரின் பேரில் போலீசார் 25 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை தீவிரமாக தேடிவருகின்றனர். மேலும் சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டது. இந்த விசாரணையில் திடுக்கிட வைக்கும் தகவல் வெளியானது.
அதாவது காட்டுப்பகுதியில் யாருக்கும் தெரியாமல் மாட்டுறைச்சி கடை நடத்தப்பட்டுள்ளது. இங்கு தினமும் 20 பசு என மாதத்துக்கு 600 பசு மாடுகள் வெட்டி இறைச்சியாக விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் பல லட்சம் வரை அந்த கும்பல் சம்பாதித்துள்ளது தெரியவந்தது. மேலும் இந்த கும்பல் மாட்டிறைச்சியை ‛டோர்டெலிவரி'யும் செய்துள்ளது தெரியவந்தது.
‛டோர் டெலவரி' செய்ய பிரத்யேகமாக வாட்ஸ்அப்பில் குழு உருவாக்கி உள்ளனர். இந்த குழுவில் மாட்டிறைச்சி வேண்டும் என கூறுவோருக்கு அவர்களின் வீடுகளுக்கே சென்று டோர் டெலிவரி செய்யப்பட்டுள்ளது தெரியவந்தது. மேலும் 300 கடைகளுக்கும் மாட்டுறைச்சி சப்ளை செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 50 கிராமங்களுக்கு இங்கிருந்து மாட்டிறைச்சி விற்பனை செய்யப்பட்டுள்ளது.
இதற்கு போலீஸ்காரர்களும் உடந்தையாக இருந்தது தெரியவந்தது. அதாவது மக்கள் புகாரளித்தும் கூட பாஸ் போலீஸ் நிலைய போலீஸ்காரர்கள் இதனை தடுக்காமல் அலட்சியமாக செயல்பட்டதும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்த பாஸ் போலீஸ் நிலையத்தின் ஏட்டு ரகுவீர் உதவி எஸ்ஐ ஞான் சந்த், போலீஸ்காரர் ஸ்வாம் பிரகாஷ், ரவிகாந்த் உள்ளிட்டவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
மேலும் அந்த மாட்டிறைச்சி கூடம் புல்டோசர் கொண்டு இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. இந்த வழக்கில் தொடர்புடைய 25 பேரும் தற்போது தலைமறைவாகி உள்ளனர். அவர்களை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications