மனைவியின் ஆடையை உருவி.. ஊரெல்லாம் ஊர்வலம் அழைத்து சென்ற கணவன்.. பக்கத்துல மாமியார் வேற.. கொடுமை
ஜெய்ப்பூர்: இன்னொரு கொடுமை ராஜஸ்தானில் நடந்துள்ளது.. இது தொடர்பான வீடியோவும் வெளிவந்து காண்போரை பதற செய்து வருகிறது.
வன்முறைகளின் உச்சமாக வடமாநிலங்கள் மாறி வருகின்றன.. குறிப்பாக கல்வி அறிவு இல்லாத கிராமங்களில் கற்பழிப்புகள், வன்முறைகள், காட்டுமிராண்டித்தமான செயல்கள் போன்றவை அரங்கேறியும் வருகின்றன.

போலீஸ் ஸ்டேஷன், கோர்ட் என மக்களுக்காக இருந்தாலும், இன்னமும்கூட சில கிராமங்களில் கிராம பஞ்சாயத்துக்கள் நடத்தப்பட்டு, அதிலேயே குற்றங்களுக்கு தண்டனையும் தரப்பட்டு வருகின்றன.. இதில் எல்லை மீறும் அநியாயங்களும், அக்கிரமங்களும் நடந்துகொண்டுதான் இருக்கின்றன.
பஞ்சாயத்து : பஞ்சாயத்து என்ற பெயரில் ஊருக்கு நடுவே பெண்களை நிற்க வைத்து, அவர்களின் மானத்தை வாங்குவதும், இழிவாக நடத்தப்படுவதும் தொடர் கதையாகி வருகிறது. பெரும்பாலும் இதில் சிக்கி கொள்வது பழங்குடி மற்றும் தலித் பெண்களே என்பது, அதைவிட வருத்தமான செய்தி.. திரிபுராவில் கடந்த வாரம்கூட, ஒரு சம்பவம் நடந்தது.
பெலோனியா அடுத்துள்ள ஈஷன்சந்திரநகர் என்ற பகுதியில் ஒரு தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு 2 குழந்தைகள் இருக்கிறார்கள். அந்த கணவருக்கு அதே பகுதியில் உள்ள 20 வயது பெண்ணுடன் கள்ளக்காதல் இருந்துள்ளது. இதனால், கிராம மக்கள், அந்த ஜோடியை கையும் களமாக பிடித்துவிட்டனர். இருவரையும் வீட்டிற்குள் வைத்தே சிறை பிடித்தனர்.
நிர்வாணம்: 2 பேரையும் கட்டி தரதரவென ஊருக்கு நடுவில் இழுத்து வந்தனர்.. அங்கிருந்த கரண்ட் கம்பத்தில் 2 பேரையும் கட்டிவைத்து, தாக்கினார்கள். அந்த நபரை அரைநிர்வாணமாக்கி அடித்து துவைத்தார்கள். இந்த வீடியோ சோஷியல் மீடியாவிலும் வெளியாகியிருந்தது. இதோ இப்போதும் ஒரு சம்பவம் நடந்துள்ளது.. இதுவும் கள்ளக்காதல்தான்.
ஆனால், கள்ளக்காதலில், ஆண் - பெண் இருவருக்குமே பங்குள்ள நிலையில், இந்த பெண்ணை மட்டும் நிர்வாணப்படுத்தி அசிங்கப்படுத்தப்பட்டுள்ளார்.. இதை செய்தது, அந்த பெண்ணின் கணவர் என்பது அதிர்ச்சியான தகவலாகும்.. இந்த கொடுமைக்கு, பெண்ணின் மாமியாரும், உடந்தையாக இருந்துள்ளது, அதைவிட கூடுதல் அதிர்ச்சியாகும்.

ராஜஸ்தான்: ராஜஸ்தானில் உள்ள பிரதாப்நகரில் இந்த சம்பவம் நடந்துள்ளது.. பழங்குடி சமூகத்தை சேர்ந்தவர் அந்த இளம்பெண்.. தன்னுடைய கிராமத்தை சேர்ந்த வேறு ஒரு ஆணுடன் இவருக்கு தொடர்பு வைத்திருந்ததாக, கிராம மக்கள் குற்றஞ்சாட்டினார்கள்.. அதனால், சொந்த ஊர்மக்களே, ஒன்றுதிரண்டு சென்று, அந்த இளம்பெண்ணை, அவரது மாமியார் வீடு இருக்கும், இன்னொரு கிராமத்துக்கு அழைத்து சென்றனர்.
நடந்த விஷயத்தை ஊர்மக்கள் முறையிட்டார்கள்.. இதைக்கேட்டதுமே கணவனுக்கு, ஆத்திரம் தலைக்கு ஏறியது.. இதனால், 2 ஊரார்கள் முன்னிலையிலேயே மனைவியின் ஆடைகளை அவிழ்த்து நிர்வாணப்படுத்தினார். அந்த பெண்ணோ, கதறி கதறி அழுதார்.. தன்னை விட்டுவிடும்படி கெஞ்சினார்..
நிர்வாணம்: ஆனாலும், எதைப்பற்றியும் கவலைப்படாமல், அந்த கணவர், உடைகளை அவிழ்த்து, நிர்வாணமாக்கினார்.. பிறகு, அந்த கிராமம் முழுவதும் ஊர்வலமாக நடந்து வர வேண்டும் என்று அடித்து தாக்கி உள்ளார்.. இந்த கொடுமையெல்லாம், அந்த பெண்ணின் குடும்பத்தினரும் பார்த்து பதறினார்கள்.. ஆனால், அவர்களால் ஒன்றுமே செய்ய முடியவில்லை.. 2 கிராம மக்களும் வேடிக்கை பார்க்க, அந்த பெண்ணின் நிர்வாண ஊர்வலம் நடந்துள்ளது.
இந்தச்சம்பவம் தொடர்பாக குற்றவாளிகளைப் பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டிருந்த நிலையில், பெண்ணின் கணவர் உள்பட 3 பேரை கைது செய்துள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அமித் குமார் தெரிவித்துள்ளார்.. காயங்களுக்காக அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்களாம்.
துணியை திணித்து: இது குறித்து போலிஸ் எஸ்பி ரவி சொல்லும்போது, "பாதிக்கப்பட்ட பெண்ணின் 10 வயது மகள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து பெண்ணின் கணவரை கைது செய்துள்ளோம். கழுதை மீது ஊர்வலமாக இழுத்துச் செல்லப்பட்டபோது, அந்த பெண்ணின் வாயில் துணியை திணித்துள்ளனர். இதனால் அந்தப் பெண் மயங்கி விழுந்துள்ளார்" என்றார்.
இந்த சம்பவம் அரசியல் ரீதியாகவும் எதிரொலிக்க துவங்கிவிட்டது.. முதல்வர் அசோக் கெலாட் இந்த சம்பவத்துக்கு ட்வீட்டில கண்டனம் தெரிவித்துள்ளார்.
மாமியார்: "மாமியார்களுடன் குடும்ப தகராறு காரணமாக ஒரு பெண்ணை அவரது மாமியார் நிர்வாணமாக்கும் வீடியோ வெளியாகியுள்ளது. டைரக்டர் ஜெனரல் இந்த விவகாரத்தில் ஏடிஜியை சம்பவ இடத்திற்கு அனுப்பி கடுமையான நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. நாகரீக சமுதாயத்தில் இதுபோன்ற குற்றவாளிகளுக்கு இடமில்லை.இந்த குற்றவாளிகள் விரைவில் சிறையில் அடைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்படுவார்கள். அவர்கள் தண்டிக்கப்படுவார்கள்" என்று கொந்தளித்துள்ளார்.
முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே, இச்சம்பவம் ராஜஸ்தான் மாநிலத்துக்கு தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளதாகவும், பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பதில் மாநில அரசு மெத்தனமாக இருப்பதாகவும் பகிரங்கமாக குற்றஞ்சாட்டியுள்ளார்.
பாஜக : "ராஜஸ்தானில் ஆட்சி முழுவதுமாக இல்லை... முதல்வர் மற்றும் அமைச்சர்கள் கோஷ்டி பூசல்களைத் தீர்ப்பதிலேயே மும்முரமாக இருக்கிறார்கள்.. இது ஒன்றும் ஆச்சரியமல்ல. மாநிலத்தில் பெண்களின் பாதுகாப்பு முற்றிலும் புறக்கணிக்கப்படுகிறது. ஒவ்வொரு நாளும் பெண்களுக்கு எதிரான துன்புறுத்தல் சம்பவங்கள் நடக்கின்றன. ராஜஸ்தான் மக்கள் மாநில அரசுக்கு பாடம் புகட்டுவார்கள்" என்று ஜேபி நட்டா கண்டனம் தெரிவித்துள்ளது, அரசியல் களத்தை அதிர வைத்து வருகிறது.
இதனிடையே, இந்த நிர்வாண ஊர்வலத்தை ஒருவர் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டார். இந்த வீடியோ வைரலாக பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.. "யாராவது காப்பாற்றுங்கள்" என்று அந்த பெண் கதறியபோதும், இதனை வேடிக்கை பார்த்தார்களே ஒழிய, யாரும் அவருக்கு உதவி செய்ய யாரும் முன்வரவில்லை.
இது தொடர்பான வீடியோக்களை யாரும் சமூக வலைதளங்களில் பரப்ப வேண்டாம் என்று போலீசாரும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.. இந்த சம்பவத்தில் தொடர்புடைய மேலும் 7 பேரை தேடி வருகின்றனர்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications