பாகிஸ்தான் உளவாளி அதிரடி கைது.. பணத்துக்காக துரோகியான ‛பதான்’.. திடுக்கிட வைக்கும் தகவல்
ஜெய்ப்பூர்: காஷ்மீரின் பஹல்காமில் நுழைந்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 26 சுற்றுலா பயணிகள் பலியாகி உள்ளனர். இதனால் இருநாடுகள் இடையே பதற்றம் அதிகரித்து வருகிறது. பயங்கரவாதிகளை தீவிரமாக ராணுவத்தினர் தேடி வருகின்றனர். இந்நிலையில் தான் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐக்கு உளவு பார்த்து தகவல்கள் அனுப்பி வந்த நபரை என்ஐஏ அதிகாரிகள் அதிரடியாக கைது செய்துள்ளர்.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த மாதம் 22ம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 26 அப்பாவி சுற்றுலா பயணிகள் பலியாகினர்.

இந்த தாக்குதலை பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாத அமைப்பான ‛தி ரெசிஸ்டண்ட் ஃப்ரண்ட்' என்ற அமைப்பு நடத்தியது. இதற்கு பதிலடி கொடுக்க நம் படைகள் தயாராகி வருகிறது. விரைவில் பாகிஸ்தானுக்கு உரிய பதிலடியை நம் படை வீரர்கள் கொடுக்க உள்ளனர்.
எல்லையில் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் அரபிக்கடலில் போர் கப்பல்கள் நிலைநிறுத்தப்பட்டுள்ள நிலையில் விமானப்படை விமானங்களும் அவசர கால பயிற்சியை தொடங்கி உள்ளன. அதேபோல் பாகிஸ்தானும் நம் நாட்டை மிரட்டி பார்க்கும் வகையில் பூச்சாண்டி காட்டி வருகிறது.
இதற்கிடையே தான் ஜம்மு காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக என்ஐஏ எனும் தேசிய புலனாய்வு முகமை விசாரணையை தொடங்கி உள்ளது. இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானின் அதிகாரப்பூர்வமான உளவு அமைப்புக்கும் தொடர்பு உள்ளதாக கூறப்படுகிறது. அந்த அமைப்பை சேர்ந்தவர்கள் தாக்குதலின் பின்னணியில் உள்ளதாக என்ஐஏ அதிகாரிகள் கூறி உள்ளனர்.
அதாவது பாகிஸ்தானின் உளவு அமைப்பாக ஐஎஸ்ஐ செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்புக்கு பஹல்காம் தாக்குதலில் தொடர்பு இருக்கிறது என்று என்ஐஏ தெரிவித்துள்ளது. இப்படியான சூழலில் தான் ஐஎஸ்ஐ உளவு அமைப்புக்கு உளவு தகவல்களை அளித்த நபரை அதிகாரிகள் அதிரடியாக கைது செய்துள்ளனர். அவரது பெயர் பதான் கான். இவர் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மாரில் வசித்து வருகிறார். அங்கு சென்று என்ஐஏ அதிகாரிகள் அவரை தட்டித்தூக்கி உள்ளனர்.
இவர் கடந்த 2013ம் ஆண்டில் பாகிஸ்தானுக்கு சென்று வந்துள்ளார். அப்போது அவரை உளவுத்துறையினர் அணுகி நம் நாடு குறித்த உளவு தகவல்களை சேகரித்து தரும்படி கூறியுள்ளனர். அதோடு பணம் வழங்குவதாகவும் தெரிவித்துள்ளனர். பணத்துக்கு ஆசைப்பட்ட பதான் கான் பாகிஸ்தான் உளவுத்துறைக்கு ஆதரவாக மாறினார். பாகிஸ்தானில் அவர் உளவு தகவல்களை சேகரிப்பது தொடர்பான பயிற்சியை பெற்றுள்ளா்ர்.
அதன்பிறகு பாகிஸ்தானில் இருந்து ராஜஸ்தான் திரும்பிய பதான் கான் அதன்பிறகு தொடர்ந்து உளவு தகவல்களை பாகிஸ்தான் உளவுத்துறையுடன் பகிர்ந்து வந்துள்ளார். அவ்வப்போது பாகிஸ்தான் சென்று தகவல்களை அவர் பரிமாறி உள்ளார். குறிப்பாக இந்தியா - பாகிஸ்தானின் சர்வதேச எல்லையாக உள்ள ஜெய்சல்மார் குறித்த விபரங்களை வழங்கி உள்ள நிலையில் தற்போது அவர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
-
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
திமுக சொன்ன அந்த வார்த்தை.. தொகுதி பங்கீட்டில் அதிருப்தியான மநீம.. நாளை கமல்ஹாசன் ஆலோசனை -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்!












Click it and Unblock the Notifications