பலாத்கார வழக்கு.. ராஜஸ்தான் அமைச்சர் பாபுலால் ராஜினாமா -படுக்கை அறைக்கு சீல்!
ஜெய்ப்பூர்: பெண் ஒருவரை பலாத்காரம் செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து ராஜஸ்தான் மாநில உணவுத் துறை அமைச்சர் பாபுலால் நாகர் தமது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசில் அமைச்சராக இருந்தவர் பாபுலால் நாகர். இவர் மீது கடந்த வாரம் 35 வயது பெண் பலாத்கார புகார் தெரிவித்திருந்தார்.

போலீசார் மறுப்பு
ஆனால் அந்த பெண்ணின் புகாரை பதிவு செய்ய போலீசார் மறுத்துவிட்டனர்.

கோர்ட் படியேறிய பெண்
இதைத் தொடர்ந்து கடந்த 13ந் தேதி, மெட்ரோபாலிடன் மாஜிஸ்திரேட் பிரதீப் மோடி முன் ஆஜராகி அந்தப் பெண் வாக்கு மூலம் அளித்தார்.

வழக்கு பதிவுக்கு உத்தரவு
பின்னர் மாஜிஸ்திரேட் உத்தரவின் படி அமைச்சர் பாபுலால் நாகர் மீது நேற்று போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணை அழைத்துக் கொண்டு அவரது வீட்டுக்குச் சென்ற போலீசார் விசாரணை நடத்தினர்.

படுக்கை அறைக்கு சீல்
அப்போது தம்மை பாபுலால் நாகர் பலாத்காரம் செய்த படுக்கை அறையையும் அப்பெண் சுட்டிக் காட்டினார். அந்த படுக்கை அறைக்கு போலீசார் சீல் வைத்தனர்.

ராஜினாமா அறிவிப்பு
இந்த நிலையில் தார்மீக அடிப்படையில் தாம் பதவியை ராஜினாமா செய்வதாக பாபுலால் நாகர் இன்று தெரிவித்துள்ளார். மேலும் தம் மீதான வழக்கை சட்டப்படி எதிர்கொள்ளப் போவதாகவும் அவர் கூறியுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications