‛சொன்னதை செய்தே தீருவேன்’’.. ராஜஸ்தான் பாஜக அமைச்சர் திடீர் ராஜினாமா! இப்படியும் ஒரு அரசியல்வாதியா?
ஜெய்ப்பூர்: எனக்கு சொன்ன வார்த்தை தான் முக்கியம் எனக்கூறி ராஜஸ்தானில் பாஜகவை சேர்ந்த கிரோடி லால் மீனா தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.
ராஜஸ்தானில் பாஜக ஆட்சி நடக்கிறது. முதல்வராக பஜன் லால் சர்மா உள்ளார். இவரது அமைச்சரவையில் பாஜகவின் மூத்த தலைவரான கிரோடி லால் மீனா அமைச்சாராக செயல்பட்டு வந்தார். இவர் விவசாயம், தோட்டக்கலை, கிராமப்புற மேம்பாடு, பேரிடம் மேலாண்மை மற்றும் நிவாரணம் உள்ளிட்ட பல்வேறு துறைகளை நிர்வகித்து வந்தார்.

இந்நிலையில் தான் சமீபத்தில் லோக்சபா தேர்தல் நடந்தது. இந்த தேர்தலின்போது கிரோடி லால் மீனா மொத்தம் 7 தொகுதிகளில் தீவிர பிரசாரம் மேற்கொண்டார். இந்த பிரசாரத்தின்போது அவர் பேசுகையில், ‛‛நான் பிரசாரம் செய்த 7 தொகுதிகளிலும் பாஜக நிச்சயம் வெல்லும். இதில் ஒரு தொகுதியில் பாஜக தோல்வியடைந்தாலும் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வேன்'' என உறுதியாக கூறினார்.
இந்நிலையில் தான் கடந்த மாதம் 4ம் தேதி லோக்சபா தேர்தல் முடிவுகள் வெளியானது. அப்போது கிரோடி லால் மீனாவுக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. ஏனென்றால் அவர் பிரசாரம் செய்த தொகுதிகளில் 3ல் மட்டுமே பாஜக வெற்றி பெற்றது. கிரோடி லால் மீனாவின் சொந்த தொகுதியான தவ்சா உள்பட 4 தொகுதிகளில் பாஜக வேட்பாளர்கள் தோல்வியடைந்தனர்.
இதையடுத்து கிரோடி லால் மீனா மிகவும் மனவருத்தம் அடைந்தார். அதோடு அவர் தனது துறை சார்ந்த அலுவலகங்களுக்கு செல்லாமல் தவிர்த்து வந்தார். இந்நிலையில் தான் 4 தொகுதிகளில் ஏற்பட்ட தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்றும், தனக்கு சொன்ன வார்த்தை தான் முக்கியம் என்றும் கிரோடி லால் மீனா தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
இதற்கான கடிதத்தை அவர் ராஜஸ்தான் முதல்வர் பஜன் லால் சர்மாவிடம் வழங்கி உள்ளார். இதுபற்றி கிரோடி லால் மீனாவின் உதவியாளர் கூறுகையில், ‛‛கிரோடி லால் மீனா அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதற்கான கடிதத்தை அவர் 10 நாட்களுக்கு முன்பே முதல்வர் பஜன் லால் சர்மாவிடம் வழங்கினார்'' என்று கூறப்பட்டுள்ளது. இருப்பினும் தற்போது வரை அவரது ராஜினாமா கடிதம் ஏற்கப்பட்டுள்ளதா? அல்லது நிராகரிக்கபப்ட்டுள்ளதா? என்பது பற்றிய அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications