கோயிலுக்குள்.. பெண்ணுடன் தனி ரூமில் இருந்த பூசாரி.. டிரஸ்ஸை கிழித்து தாக்கிய மக்கள்.. பகீர் வீடியோ
கோயிலுக்குள் பெண்ணுடன் சிக்கிய பூசாரிக்கு அடிஉதை விழுந்துள்ளது
ராஜஸ்தான்: கோவிலில் பெண்ணுடன் தனிரூமில் இருந்துள்ளார் பூசாரி.. இதை பார்த்த பொதுமக்கள் ஆத்திரமடைந்து அவர்களை செருப்பாலேயே அடித்து விரட்டிய சம்பவம் வீடியோவாகவே வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் சித்தோர்கர் மாவட்டத்தில் கங்கரார் என்ற பகுதி உள்ளது.. இங்கு சர்னேஷ்வர் மகாதேவ் என்ற பிரசித்தி பெற்ற கோயில் உள்ளது..
இங்கு பூசாரியாக இருப்பவர், பெண் ஒருவருடன் தனியறையில் இருந்துள்ளார்... இதை அந்த ஊர் மக்களே கண்ணால் பார்த்துவிட்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்..

தனியறை
அதனால், சம்பந்தப்பட்ட 2 பேரையும் வெளியே இழுத்து செருப்பால் அடித்துள்ளனர்.. 2 பேரையுமே தயவுதாட்சண்யமின்றி சராமாரியாக தாக்கியும் உள்ளனர்... குறிப்பாக அந்த பெண்ணின் டிரஸ்ஸை கிழித்து, அவரை கீழே தள்ளியும் தாக்கினர்.. இந்த காட்சிகள் அத்தனையும் வீடியோவாக வெளிவந்து இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.

மறுப்பு
நடந்த சம்பவம் குறித்து பூசாரியும், அந்த பெண்ணும் சொல்லும்போது, எங்களை சிலர் தவறாக புரிந்து கொண்டுவிட்டனர்.. என்ன ஏதென்று தெரியாமலேயே தாக்கி, அதை வீடியோவாக எடுத்துவிட்டனர் என்று மறுப்பு தெரிவித்து கொண்டே உள்ளனர்.

வீடியோ
அந்த பெண் சொல்லும்போது, என் கணவர் மிகப்பெரிய வேலையில் இருக்கிறார்... சமூகத்தில் ஒரு அந்தஸ்துடன் இருக்கிறார்.. இப்படிப்பட்ட சம்பவத்தால் என் குடும்பமே மனஉளைச்சலுக்கு ஆளாகி விட்டது.. என்று கண்ணீர் மல்க கூறுகிறார்.. இதுகுறித்து போலீசுக்கும் தகவல் சென்றது.. போலீசாரும் சம்பவம் குறித்து விசாரணையை ஆரம்பித்தனர்.. இந்நிலையில், பாதிக்கப்பட்ட பெண் தன்னுடைய கணவனுடன் வந்து போலீசில் புகார் தந்துள்ளார்..

புகார்
கோவிலுக்குள்தகாத முறையில் எந்த தவறும் நடந்து கொள்ளாத எங்களை தாக்கியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று புகாரில் கேட்டுக் கொண்டுள்ளார்.. இந்த தாக்குதலில் தொடர்புடைய 7 பேரையும் அடையாளம் காட்டி உள்ளார்... ஒருவேளை இந்த விவகாரத்தில் தனக்கு நியாயம் கிடைக்கவில்லை என்றால், எஸ்பி ஆபீஸ் முன் தர்ணாவில் ஈடுபடுவேன் என்றும் தெரிவித்துள்ளார்..
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications