20 ஆண்டாக அரசியல் பயிற்சி பெற்றிருக்கிறார் ரஜினி.. அவர்தான் ஊழலை ஓழிப்பார்.. சொல்கிறார் ராஜ்பகதூர்
இருபது ஆண்டாக அரசியல் பயிற்சியை ரஜினிகாந்த் பெற்றிருக்கிறார் என்று அவரது நண்பர் ராஜ்பகதூர் கூறியுள்ளார். ரஜினியால்தான் ஊழலை ஒழிக்க முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.
பெங்களூரு: தொடர்ந்து 20 ஆண்டுகள் அரசியல் பயிற்சியை நடிகர் ரஜினிகாந்த் பெற்றிருக்கிறார் என்றும் அவரால்தான் தமிழகத்தில் ஊழலை ஒழிக்க முடியும் என்றும் ரஜினிகாந்த்தின் நண்பர் ராஜ்பகதூர் கூறியுள்ளார்.
கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நீண்ட நாட்களுக்கு பிறகு ரசிகர்களை சந்தித்து நடிகர் ரஜினிகாந்த் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
5 நாட்களாக 15 மாவட்டங்களைச் சேர்ந்த ரசிகர்களை சந்தித்து வந்த அவர், கடைசி நாளில் உரையில், அரசியல் தலைவர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் சிஸ்டம் சரியில்லை என்றும் திறமையான தலைவர்கள் இருந்தும் பயனில்லை என்றும் ரஜினி பேசியது தமிழக அரசியலில் பரபரப்பை கிளப்பியது.

தனிக்கட்சி
இந்நிலையில், ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து அவரது நீண்ட நாள் நண்பரான, பெங்களூருவில் வசிக்கும் ராஜ்பகதூர் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்தார். அதில் ரஜினிகாந்த் கண்டிப்பாக அரசியலுக்கு வருவார் என்று தெரிவித்தார். அதே போன்று தனிக்கட்சிதான் தொடங்குவார் என்று திட்டவட்டமாக கூறியுள்ளார்.‘

20 ஆண்டு பயிற்சி
ரஜினி காந்த் அரசியலில் பங்கேற்க தொடர்ந்து 20 ஆண்டுகள் பயிற்சி பெற்றிருக்கிறார் என்றும் ராஜ்பகதூர் தெரிவித்துள்ளார். நீண்ட நாட்கள் பயிற்சி எடுத்த அவரால் மட்டுமே தமிழகத்தில் ஊழலை ஒழிக்க முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.

ரஜினி சம்பளம்
திரைப்படத்தில் நடித்து பெறும் சம்பள விஷயத்தில் ரஜினிகாந்த் வெளிப்படையாக நடந்து கொள்கிறார் என்று ராஜ்பகதூர் சான்றிதழ் வழங்கி இருக்கிறார். அதனால், தமிழக மக்களின் அனைத்துப் பிரச்சனைக்கும் அவரால் வெளிப்பாடையாக தீர்வு காண முடியும் என்றும் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.

அரசியல் அவசியம்
ரசிகர் மன்றங்கள் மூலம் ஏழைகளுக்கு உதவ முடியாது என்று கருத்து தெரிவித்துள்ள ராஜ்பகதூர், ஊழல் பணத்தை கைப்பற்றி ஏழைகளுக்கு கொடுக்க ரஜினிக்கு அரசியல் தேவை என்ற கூறியுள்ளார். மேலும், தமிழ்நாட்டு மக்களால் வளர்ந்த ரஜினிகாந்த் தமிழகத்தில்தான் அரசியல் செய்ய முடியும் என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications