வினாச காலே விபரீத புத்தி.. காலா படப்பிடிப்பில் நண்பர்களிடம் ரஜினி சாடியது யாரை?
தம் மீதான கடும் விமர்சனங்களுக்கு ரஜினி அளித்திருக்கும் பதில்: வினாச காலே விபரீத புத்தி என்பதுதான்.
மும்பை: தமக்கு எதிரான விமர்சனங்கள் தொடர்பாக காலா படப்பிடிப்பில் நண்பர்களிடம் விவாதித்த ரஜினிகாந்த், 'வினாச காலே விபரீத புத்தி' என சாடியிருக்கிறார். ரஜினி சாடியது யாரை என்பது தொடர்பாக பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது.
ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவார்; பாஜகவில் இணைவார் என பேராவலுடன் காத்திருந்தது பாஜக. ஆனால் அவரோ தனிக்கட்சி தொடங்குவதில் மிகவும் உறுதியாக இருந்து வருகிறார்.
இது தொடர்பாக தீவிரமான ஆலோசனைகளையும் நடத்தி வருகிறார். இதனால் கடும் அதிருப்தி அடைந்த பாஜக சுப்பிரமணியன் சுவாமி போன்றோர் மூலம் ரஜினியை விமர்சித்து வருகிறது.

ரஜினிக்கு தகுதி இல்லை
சுப்பிரமணியன் சுவாமி தமது ட்விட்டர் பக்கத்தில் ரஜினிகாந்தை 420; படிக்காதவர்; அரசியலுக்கு தகுதி இல்லாதவர் என கடுமையாக விமர்சித்தார். ஆனால் தமிழக பாஜக தலைவர்களோ ரஜினிக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ஒருமையில் திட்டிய சுவாமி
இதனிடையே சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய சுப்பிரமணியன் சுவாமி, ரஜினிகாந்தை அவன் அரசியலுக்கு வரமாட்டான் என ஒருமையில் பேசினார். இது ரஜினி ரசிகர்களை கடுமையாக கொந்தளிக்க வைத்தது.

பேட்டியை பார்த்த ரஜினி
சுப்பிரமணியன் சுவாமி பேட்டியின் வீடியோ மும்பை காலா படப்பிடிப்பில் உள்ள இயக்குநர் ரஞ்சித்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அவர் ரஜினிகாந்திடம் சுப்பிரமணியன் சுவாமி தம்மை ஒருமையில் திட்டும் வீடியோவை போட்டு காட்டியிருக்கிறார்.

ரஜினி கடும் கோபம்
இந்த விமர்சனத்தால் கடும் கோபமடைந்த ரஜினிகாந்த் படப்பிடிப்பில் ரஞ்சித் உள்ளிட்டோருடன் விவாதித்திருக்கிறார். அப்போது கடும் கோபத்தில் 'வினாச காலே விபரீத புத்தி' என ஸ்லோகத்தை சொல்லி சாடியிருக்கிறார் (அழிவுகாலம் தொடங்கிவிட்டதால் புத்தி கெட்டதைத்தான் பேசும், விபரீதமாகத்தான் யோசிக்கும் என்பது இந்த ஸ்லோகத்தின் அர்த்தம்).

திட்டியது யாரையாம்?
இத்தகவல் ரஜினி ஆதரவு அரசியல் கட்சித் தலைவர்களுக்கு கிடைத்தது. ரஜினிகாந்த் வினாச காலே விபரீத புத்தி என திட்டியது சுப்பிரமணியன் சுவாமியையா அல்லது அவரைத் தூண்டிவிட்ட பாஜகவையா? என்பதுதான் இப்போது பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது.
-
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications