For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வயநாட்டில் ராகுல் காந்தி போட்டி ஏன்.. கண்களை ஈரமாக்கும் ஒரு சென்டிமென்ட் இருக்கு!

Google Oneindia Tamil News

Recommended Video

    Rahul Gandhi in Wayanad: ராகுல் காந்தி வயநாட்டில் போட்டியிட இப்படி ஒரு காரணம் இருக்கா?- வீடியோ

    டெல்லி: வயநாட்டில் போட்டியிட காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி முடிவெடுத்துள்ள பின்னணியில் ஒரு நெகிழ்ச்சியான பிளாஷ் பேக் உள்ளது.

    கேரள மாநிலம் வயநாடு தொகுதியில், ராகுல் காந்தி போட்டியிட இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். உத்தரபிரதேசத்தின், அமேதி தவிர்த்து வயநாட்டிலும் அவர் போட்டியிட முடிவு செய்துள்ளார்.

    இந்த நிலையில்தான், வயநாடு தொகுதிக்கும் ராகுல் காந்திக்குமான ஒரு சென்டிமென்ட் பிணைப்பு பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

    அரசியல் காரணங்கள்

    அரசியல் காரணங்கள்

    இஸ்லாமியர்கள் வாக்குகள் அதிகம், கேரளா, தமிழகம், கர்நாடகா எல்லையில் உள்ள தொகுதி என எவ்வளவு அரசியல் ரீதியாக காரணங்கள் சொன்னாலும், சென்டிமென்ட் காரணமும், ராகுலின் வயநாடு போட்டி முடிவுக்கு முக்கிய காரணம் என்கிறார்கள் காங்கிரஸ் வட்டாரத்தில். அதுபற்றி அறிய சில காலம் பின்னோக்கி செல்ல வேண்டும்.

    உங்களுக்கு பாடம் புகட்டுவேன்.. வயநாட்டில் ராகுலை எதிர்க்கும் சரிதா நாயர்.. தேர்தலில் போட்டி! உங்களுக்கு பாடம் புகட்டுவேன்.. வயநாட்டில் ராகுலை எதிர்க்கும் சரிதா நாயர்.. தேர்தலில் போட்டி!

    அஸ்தி கரைப்பு

    அஸ்தி கரைப்பு

    1991ம் ஆண்டு அப்போதைய பிரதமராக இருந்த ராஜிவ் காந்தி, ஸ்ரீபெரும்புதூர் அருகே தற்கொலைப்படை தாக்குதலில் கொல்லப்பட்டார். இதையடுத்து, அவரது உடல் எரியூட்டப்பட்டது. அவரது அஸ்தியை கரைக்க புண்ணிய நதி தேடப்பட்டது. அப்போது வயநாடு தொகுதியிலுள்ள திருநெல்லி என்ற ஊரில் உள்ள மகா விஷ்ணு கோவில் அருகேயுள்ள பாபநாஷினி ஆற்றில் ராஜிவ் காந்தி அஸ்தியை கரைக்க முடிவு செய்ப்பட்டது.

    உங்களுக்கு அரசியல் தெரியுமா? அப்போ இதுக்கு பதில் சொல்லுங்க.. பாஸ் பண்ணிட்டா கெத்துதான்!

    வேட்பாளர்

    வேட்பாளர்

    இதையடுத்து, சிறப்பு பிரார்த்தனைகளுடன், ராகுல் காந்தியால், அவரது தந்தை ராஜிவ் காந்தியின் அஸ்தி, பாபநாஷினி நதியில் கரைக்கப்பட்டது. ஏ.கே.அந்தோணி, கருணாகரன் போன்ற சீனியர் தலைவர்கள் சோகமே உருவாக அங்கே குழுமியிருந்தனர். பல வருடங்கள் கழிந்து ஓடிய நிலையில், மீண்டும், ராகுல் காந்தி, வயநாடு மண்ணில் ஒரு வேட்பாளராக காலடி எடுத்து வைத்துள்ளார்.

    தெற்கு காசி

    தெற்கு காசி

    திருநெல்லி தென் இந்தியாவின் காசி என அழைக்கப்படுகிறது. நரேந்திர மோடி வாரணாசியில் (காசி) போட்டியிடும் நிலையில், அவரின் அரசியல் எதிராளி ராகுல் காந்தி தென் இந்தியாவின் காசியில் போட்டியிடுவது மற்றொரு சிறப்பு தகவலாகும். வயநாடு மாவட்டத்தில் மட்டும்தான், ராமபிரான், சீதாவின் குழந்தைகளான லவ, குசாவிற்கு கோயில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

    English summary
    Years ago, the ashes of former prime minister of India Rajiv Gandhi was immersed in the holy waters of Papanasini river at Thirunelli Maha Vishnu Temple in Wayanad, now his son Rahul Gandhi has returned to the same land to represent his candidature.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X