For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

1987-ல் ராஜிவ் ஆட்சியை அகற்றி ராணுவப் புரட்சிக்கு சதி... முன்னாள் ராணுவ அதிகாரி 'திடுக்' தகவல்

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: 1987ஆம் ஆண்டு பிரதமராக இருந்த ராஜிவ் காந்தி தலைமையிலான ஆட்சியை கைப்பற்றி ராணுவப் புரட்சிக்கு சதித் திட்டம் தீட்டப்பட்டதாக முன்னாள் ராணுவ அதிகாரி லெப். ஜெனரல் பி.என். ஹூண் திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளார்.

ராணுவத்தின் மேற்கு பிராந்திய ராணுவ தளபதியாக இருந்தவர் லெப். ஜெனரல் பி.என். ஹூண். அவர் "The Untold Truth" என்ற தலைப்பில் நூல் ஒன்றை எழுதியுள்ளார். அப்புத்தகத்தில் ராஜிவ்காந்திக்கும் முன்னாள் ஜனாதிபதி ஜெயில்சிங்குக்குமான மோதல்கள் பற்றிய பல தகவல்களை குறிப்பிட்டிருக்கிறார்.

Rajiv Gandhi, Giani Zail Singh and their uncomfortable relationship

அதில் சில .........

  • 1987ஆம் ஆண்டு 3 துணை கமாண்டோ பட்டாலியன்கள் டெல்லிக்கு விரைந்து செல்லுமாறும் ராஜிவ் காந்தியிடம் இருந்து ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுமாறும் உத்தரவிடப்பட்டிருந்தது.
  • ராஜிவ்காந்தி மீது அதிருப்தியில் இருந்த சில அரசியல் தலைவர்களும் இந்த சதித் திட்டம் குறித்து தெரிந்து மகிழ்ச்சியடைந்தனர்.
  • முப்படைகளின் தலைவரான ஜனாதிபதியாக இருந்த ஜெயில்சிங்குக்கும் இது தெரிந்திருந்தது. ஆனால் அவர் இந்த சதியை நிறைவேற்ற முன்வரவில்லை. அவரைப் பொறுத்தவரை ஒட்டுமொத்த அதிகாரமும் ராணுவம் வசம் சென்றுவிட்டால் மோசமான நிலைமை ஏற்படும் என கருதினார்.
  • ராஜிவ்காந்தியைப் பொறுத்தவரையில் ஒருபோதும் ஜனாதிபதியாக இருந்த ஜெயில்சிங்கை முழுமையாக நம்பியதே இல்லை
  • இந்திரா காந்தியை சீக்கிய பாதுகாவலர்கள் படுகொலை செய்ததைத் தொடர்ந்து ஜெயில்சிங்கை சந்தேகத்துடனேயே ராஜிவ் காந்தி பார்த்துவந்தார்.
  • பஞ்சாப் தனி நாடு கோரும் காலிஸ்தான் இயக்கத் தலைவர்களுடன் ஜெயில்சிங் தொடர்பில் இருப்பதாக ராஜிவ் நம்பினார். அதனால் ஜெயில்சிங் தொலைபேசிகளை டேப் செய்ய உத்தரவும் பிறப்பித்தார்.
  • ஜனாதிபதி ஜெயில்சிங் ராஷ்டிரபதி பவனுக்குள்ளும் வெளியிலும் பேசிய அனைத்தும் பதிவு செய்யப்பட்டன. இதை ஜெயில்சிங்கும் அறிந்துவைத்திருந்தார்.
  • ராஜிவ்காந்தியை ஊழல்வாதியாகத்தான் ஜெயில்சிங் கருதினார். அவரே ஊழல்களுக்கு பொறுப்பு எனவும் பேசினார்.
  • இந்திரா சுட்டுக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் நீதி கிடைக்க வேண்டும் என ஜெயில்சிங் விரும்பினார். ஆனால் ராஜிவ்காந்தி இதில் முனைப்பு காட்டததால் அவர் அதிருப்தி அடைந்திருந்தார்.

English summary
There was always an uncomfortable relationship between Rajiv Gandhi and Giani Zail Singh. The former Prime Minister and the President of India never showered any trust on each other. A plot to topple Rajiv Gandhi was known to Zail Singh, a book titlted The Untold Truth, by Lt General P N Hoon, a former Army commander of the Western Command suggests.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X