தூத்துக்குடி மக்கள் அமைதி காக்க வேண்டும்.. ராஜ்நாத் சிங் வேண்டுகோள்
தூத்துக்குடியில் அமைதி திரும்ப மக்கள் ஒத்துழைப்பு தரவேண்டும் என மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Recommended Video

டெல்லி: தூத்துக்குடியில் அமைதி திரும்ப மக்கள் ஒத்துழைப்பு தரவேண்டும் என மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் போது போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இரண்டு நாட்களில் 13 பேர் கொல்லப்பட்டனர்.

70க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சம்பவத்தால் மாவட்டம் முழுவதும் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தூத்துக்குடி மக்கள் அமைதி காக்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் டிவிட்டர் வாயிலாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அவர் கூறியிருப்பதாவது, தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்ற போராட்டத்தில் விலைமதிப்பற்ற உயிரிழப்புகள் ஏற்பட்டதை அறிந்து நான் மிகவும் வேதனைப்படுகிறேன். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தியதுடன், மாநில அரசாங்கத்திலிருந்து அறிக்கையும் கேட்கப்பட்டுள்ளது.
I am deeply pained at the loss of precious lives during the agitation at Tuticorin in Tamil Nadu. The MHA has taken cognisance of the situation and sought a report on the incident and the prevailing situation from the state government.
— Rajnath Singh (@rajnathsingh) May 24, 2018
உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள். காயமடைந்தவர்களின் விரைவான மீட்புக்காகவும் நான் பிரார்த்திக்கிறேன். தூத்துக்குடியில் அமைதி திரும்ப மக்கள் ஒத்துழைப்பு தரவேண்டும். இவ்வாறு ராஜ்நாத் சிங் டிவிட்டியுள்ளார்.
My thoughts are with bereaved families. I also pray for the speedy recovery of the injured. I appeal to the people in Tuticorin to remain calm and maintain peace and tranquility in the region.
— Rajnath Singh (@rajnathsingh) May 24, 2018












Click it and Unblock the Notifications