வன்முறை வேண்டாம்... பேச்சுவார்த்தைக்கு வாருங்கள்- மாவோயிஸ்டுகளுக்கு ராஜ்நாத் சிங் அழைப்பு
பிலாஸ்பூர்: மாவோயிஸ்டுகள் வன்முறையை கைவிட்டால் பேச்சுவார்த்தை நடத்த தயார் என உள்துறை அமச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பொறுப்பேற்று 2 ஆண்டுகள் முடிந்ததையொட்டி சட்டீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூரில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டார். அப்போது அவர் கூறுகையில்,
மாவோயிஸ்டுகள் வன்முறையைக் கைவிட்டு அமைதி பேச்சுவார்த்தைக்கு முன்வர வேண்டும். வன்முறையைக் கைவிட்டால் அனைத்து பிரச்சினைகள் குறித்தும் விவாதிக்க மத்திய அரசு தயாராக உள்ளது.

வன்முறை நாட்டின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய தடையாக உள்ளது. இந்திய மக்கள் வன்முறையை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஏழைகள் மற்றும் பொதுமக்களின் நலனில் அக்கறை உள்ளவர்கள் அப்பாவி மக்களைக் கொல்ல மாட்டார்கள். வன்முறையை தவிர்த்து வேறு சித்தாந்தத்தை மாவோயிஸ்டுகள் பின்பற்றலாம். ஆனால், அது அப்பாவி மக்களைக் கொல்லும் செயலாக இருக்கக் கூடாது.
மேலும், ஜம்மு காஷ்மீர் மாநில எல்லையில் பாதுகாப்பு பலப் படுத்தப்பட்டுள்ளது. இதனால் தீவிரவாதிகளின் ஊடுருவல் 50% குறைந்துள்ளது. முன்னதாக, எல்லைப்பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி இந்தியாவினுள் ஊடுருவி வந்தனர். தற்போது பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதால் தீவிரவாதிகள் ஊடுருவுதலுக்கு சாத்தியமில்லை என்று அவர் கூறினார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications