100 பாகிஸ்தான் ராணுவ வீரர்களின் தலைகளை வெட்ட வேண்டும்... பாபா ராம்தேவ் ஆவேசம்!
பாகிஸ்தான் ராணுவம் நம் வீரர் ஒருவரின் தலையைக் சிதைத்தால் நாம் அவர்கள் ராணுவத்தினர் 100 பேரின் தலையைக் வெட்ட வேண்டும் என்று யோகா குரு பாபா ராம்தேவ் தெரிவித்துள்ளார்.
டெல்லி: இந்திய ராணுவ வீரர் ஒருவரின் தலை வெட்டப்பட்டால் அதற்கு பதிலாக பாகிஸ்தான் வீரர்கள் 100 பேரின் தலைகளை வெட்ட வேண்டும் என்று பாபா ராம்தேவ் கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பன்னாட்டு நிறுவனங்களுக்கு சவால் விடும் வகையில் பதஞ்சலி நிறுவனமும் டூத்பேஸ்ட், தேன், நூடுல்ஸ், கூந்தல் தைலம், சமையல் எண்ணெய், சோப், உள்ளிட்ட பல்வேறு பொருட்களை இந்தியாவில் அறிமுகப்படுத்தி சந்தைப்படுத்தி வருகிறது.

இந்நிலையில் பதஞ்சலி நிறுவன தயாரிப்பு பொருட்கள் தொடர்பான செய்தியாளர்கள் சந்திப்பு டெல்லியில் இன்று நடைபெற்றது. அப்போது பேசிய பாபா ராம்தேவ், பாகிஸ்தான் ராணுவத்தினர் நமது வீரர்கள் தலையை வெட்டி சிதைக்கின்றனர். அதற்கு நாம் இஸ்ரேல் வழியில் 100 பாகிஸ்தான் ராணுவ வீரர்களின் தலையைக் வெட்ட வேண்டும் என்று கூறினார்.
மேலும், பதஞ்சலியின் உற்பத்தி திறன் தற்போது ரூ 30,000 கோடியாக உள்ளது. அடுத்த ஆண்டு உற்பத்தித் திறன் ரூ.60,000 கோடியாக அதிகரிக்கும் என்றதோடு, மஹாத்மா காந்தி, சந்திரசேகர் ஆசாத் ஆகியோர் கூறியது போல் அயல்நாட்டுப் பொருட்களை பயன்படுத்தக் கூடாது, சீனப்பொருட்களை நாம் புறக்கணிக்க வேண்டும் என்றும் ராம்தேவ் கூறினார்.
கோல்கேட், யுனிலீவர், புராக்டர் அண்ட் காம்பிள் போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் மறைமுகமாக சுமார் 50 லட்சம் கோடி முதலீட்டை வைத்துள்ளன என்று குற்றம்சாட்டிய அவர், பிரதமர் மோடியின் ரத்தத்தில் தேசபக்தி ஊறியிருக்கிறது என்றும் தெரிவித்தார்.
-
இந்திய மாம்பழங்கள் வேண்டாம்.. அதிரடியாக தடை விதித்த ஜப்பான்! பின்னணியில் ஷாக் காரணம் -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications