ராம் ரஹீம் சிங் குற்றவாளி என தீர்ப்பளித்த நீதிபதிக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்காத மத்திய அரசு

தேரா சச்சா செளதா அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங், பாலியல் வழக்கில் குற்றவாளி என தீர்ப்பளித்த நீதிபதி ஜகதீப் சிங்கிற்கு, இசட் பிளஸ் பாதுகாப்பை வழங்க மத்திய அரசு முடிவெடுக்காமல் உள்ளது அதிர்வல

Subscribe to Oneindia Tamil

டெல்லி: தேரா சச்சா சவுதா என்ற ஆன்மிக அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹிம் சிங், பாலியல் வழக்கில் குற்றவாளி என தீர்ப்பளித்த நீதிபதி ஜகதீப் சிங்கிற்கு, இசட் பிரிவு பாதுகாப்பை வழங்க மத்திய அரசு முடிவெடுக்காமல் உள்ளது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

ராம் ரஹிம் சிங், இரண்டு பெண் சீடர்களை பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக அவர் மீது சென்ற 2002 ம் ஆண்டு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது.

நீதிமன்ற உத்தரவின்பேரில் அவர் மீது சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியது. நீண்ட காலம் நடைபெற்று வந்த இந்த வழக்கில் கடந்த வெள்ளி பிற்பகல் தீர்ப்பு வழங்கப்பட்டது.

36 பேர் பலி

36 பேர் பலி

இதனையடுத்து, ராம் ரஹீம் சிங்கின் ஆதரவாளர்களால் நடத்தப்பட்ட வன்முறைகளில் இதுவரை 36 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 250க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.

ஹெலிகாப்டரில் நீதிபதி

ஹெலிகாப்டரில் நீதிபதி

இதனால் பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலத்தில் பதற்றம் நிலவுகிறது. இந்த அந்நிலையில், சி.பி.ஐ. நீதிமன்றத்தை ரோதக் சிறைக்கு மாற்றி, ராம் ரஹீம் சிங்கின் தண்டனையை அறிவிக்க ஆணையிடப்பட்டுள்ளது. சிறப்பு நீதிபதி கைதீப் சிங்கை ஹெலிகாப்டர் மூலம் ரோதக் சிறைக்கு கொண்டு செல்ல, உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

துப்பாக்கி பறிமுதல்

துப்பாக்கி பறிமுதல்

ராம் ரஹீம் சிங்கிற்கு பாதுகாப்பு வழங்கிய பஞ்சாப் போஸீடம் இருந்து ஏகே-47 ரக துப்பாக்கி கைப்பற்றப்பட்டுள்ளது. இதற்காக போஸீஸ் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

நீதிபதிக்கு பாதுகாப்பு?

நீதிபதிக்கு பாதுகாப்பு?

கடந்த 14 ஆண்டுகளாக நடைபெற்ற இந்த வழக்கில் குர்மீத் ராம் ரஹிம் சிங்குக்கு அளிக்கப்படும் தண்டனை தொடர்பான தீர்ப்பு வரும் நாளை வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், நீதிபதிக்கு மத்திய அரசு இசட் பிளஸ் பாதுகாப்பை வழங்க முடிவு செய்யாமல் இருப்பது கவனிக்கத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+