15 வருடம் நீண்ட பாலியல் வழக்கு.. பல திருப்பங்களுக்கு பிறகு ராம் ரஹிமுக்கு 20 வருடம் சிறை
டெல்லி: தேரா சச்சா அமைப்பு தலைவர் சாமியார் ராம் ரஹிம் மீதான பாலியல் வழக்கு கடந்து வந்த பாதை இதுதான்:
2002ம் ஆண்டு ஏப்ரலில், ஒரு அனாமதேய கடிதம் அப்போதைய பிரதமர் வாஜ்பாய்க்கு வந்தது. அதில் தன்னை ராம் ரஹிம் சிஷ்யை என கூறிக்கொண்ட ஒரு பெண், சாமியார் தன்னை பாலியல் ரீதியாக பயன்படுத்திவிட்டதாக குற்றம்சாட்டியிருந்தார்.

2002 செப்டம்பர் 3ல், இந்த கடிதத்தை ஆதாரமாக கொண்டு, ஹைகோர்ட் தானாக முன்வந்து எடுத்தது. சிர்சா மாவட்ட நீதிமன்றம் இதுபற்றி விசாரிக்க உத்தரவிட்டது.
2002 செப்டம்பரில், மாவட்ட நீதிமன்றம், பிறப்பித்த உத்தரவில், மத்திய புலனாய்வு அமைப்புதான் இதை விசாரிக்க வேண்டும் என கூறியது.
2002 செப்டம்பர் 24ல், இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க ஹைகோர்ட் பரிந்துரைத்தது. 6 மாதங்களுக்குள் அறிக்கை வழங்க வலியுறுத்தியது.
2002 டிசம்பரில் சிபிஐயால் ராம் ரஹிம் சிங் மீது பலாத்கார வழக்கு பதிவு செய்யப்பட்டது.
2007 ஜூலையில், சிபிஐ இவ்வழக்கின் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. 1999 முதல் 2001 வரை 2 சிஷ்யைகளை ராம் ரஹிம் பலாத்காரம் செய்ததாக குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
2008 செப்டம்பர் 6ம் தேதி, சிபிஐ சிசறப்பு நீதிமன்றம், ராம் ரஹிம் மீது பலாத்காரம், குற்றச்செயல் உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் குற்றச்சாட்டுகளை பதிவு செய்தது.
2011 ஏப்ரல் 5ம் தேதி, சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அம்பாலாவிலிருந்து, பஞ்குலாவுக்கு மாற்றப்பட்டது.
2017 ஜூலை 11ல், விசாரணையை விரைந்து முடிக்குமாறு, சிபிஐ நீதிமன்றத்திற்கு, ஹைகோர்ட் உத்தரவிட்டது.
2017 ஆகஸ்ட் மாதம், வாதங்கள் நிறைவடைந்தது. ஆகஸ்ட் 25ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று நீதிமன்றம் தெரிவித்தது. நீதிபதி ஜக்தீப் சிங் இவ்வுத்தரவை பிறப்பித்தார்.
ஆகஸ்ட் 25ம் தேதி, நீதிபதி ஜக்தீப் சிங், ராம் ரஹிம் குற்றவாளி என்று தீர்ப்பு வழங்கினார். தண்டனை விவரத்தை 28ம் தேதி அறிவிப்பதாக தெரிவித்தார்.
ஆகஸ்ட் 28ம் தேதி, இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி ஜக்தீப் சிங், ராம் ரஹிமுக்கு 2 பலாத்கார வழக்குகளும் தலா 10 வருடம் சிறை தண்டனை விதித்து 20 வருடங்கள் சிறையில் இருக்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கினார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications