டெல்லி ராஜ்காட்டில் ராம்நாத் கோவிந்த்... காந்தி நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை

நாட்டின் 14வது குடியரசுத்தலைவராக பதவியேற்க உள்ள ராம்நாத் கோவிந்த் காந்தி நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

Subscribe to Oneindia Tamil

டெல்லி: குடியரசுத்தலைவராக பொறுப்பேற்க உள்ள ராம்நாத் கோவிந்த் டெல்லியில் காந்தி நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் நேற்றுடன் நிறைவடைவதைத் தொடர்ந்து, இந்தியாவின் 14வது ஜனாதிபதியாக ராம்நாத் கோவிந்த் பொறுப்பேற்க உள்ளார். நாடாளுமன்ற மைய மண்டபத்தில் குடியரசுத்தலைவர் பதவியேற்பு விழா நடைபெறுகிறது.

RamNath Kovind pays tribute to Mahatma Gandhi

நாட்டின் முதல் தலித் குடியரசுத் தலைவராக 1997 முதல் 2002 வரை கே.ஆர்.நாராயணன் பணியாற்றினார். அவருக்கு அடுத்து 2-வது தலித் குடியரசுத் தலைவர் என்ற பெருமையை ராம்நாத் கோவிந்த் பெற்றுள்ளார்.

நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நண்பகல் 12.15 மணிக்கு பதவியேற்பு விழா நடைபெறுகிறது. இந்த விழாவில் அனைத்து மாநில ஆளுநர்கள், மாநில முதல்வர்கள் பங்கேற்க உள்ளனர். குடியரசுத்தலைவர் பதவியேற்பு விழா நடைபெறுவதை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதற்கு முன்னதாக ராஜ்காட்டில் உள்ள காந்தி நினைவிடம் சென்று மலர்தூவி மரியாதை செலுத்தியுள்ளார் ராம்நாத் கோவிந்த்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+