நாட்டின் 14வது குடியரசுத் தலைவராக பதவியேற்றார் ராம்நாத் கோவிந்த்!
நாட்டின் 14வது குடியரசுத் தலைவராக ராம்நாத் கோவிந்த் இன்று பதவியேற்றார்.
டெல்லி: நாட்டின் 14வது குடியரசுத் தலைவராக ராம்நாத் கோவிந்த் இன்று பதவியேற்றார். அவருக்கு நாட்டின் தலைமை நீதிபதி ஜெஎஸ் கெஹர் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் நேற்றுடன் முடிவடைந்தது. இதையடுத்து புதிய குடியரசுத் தலைவராக ராம்நாத் கோவிந்த் இன்று பதவியேற்றார்.
புதிய குடியரசுத் தலைவருக்கான தேர்தல் கடந்த 17ஆம் தேதி நடைபெற்றது. இதில் ஆளும் பாஜக சார்பில் ராம்நாத் கோவிந்த் குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

20ஆம் தேதி
எதிர்க்கட்சி வேட்பாளராக முன்னாள் லோக்சபா சபாநாயகர் மீரா குமார் களம் இறக்கப்பட்டார். வாக்குப்பதிவு முடிவுகள் கடந்த 20ஆம் தேதி அறிவிக்கப்பட்டன.

வெற்றி பெற்ற ராம்நாத்கோவிந்த்
அதில் எதிர்க்கட்சி வேட்பாளர் மீராகுமாரை விட 65 சதவீத வாக்குகள் அதிகம் பெற்று ராம்நாத் கோவிந்த் வெற்றி பெற்றார். இதையடுத்து புதிய குடியரசுத் தலைவர் பதவியேற்பு விழா இன்று நடைபெற்றது.

நாடாளுமன்றத்துக்கு வருகை
இதற்காக குடியரசுத் தலைவர் மாளிகையில் இருந்து பிரணாப் முகர்ஜி, ராம்நாத் கோவிந்தை நாடாளுமன்றத்துக்கு அழைத்து வந்தார். இதைத்தொடர்ந்து நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நண்பகல் 12.15 மணிக்கு பதவியேற்பு விழா நடைபெற்றது.

பதவி பிரமாணம்
அப்போது நாட்டின் தலைமை நீதிபதி கெஹர் அவருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். பதவியேற்றதை தொடர்ந்து குடியரசுத் தலைவர் இருக்கையில் ராம்நாத் கோவிந்து அமர்ந்தார்.

ராம்நாத்கோவிந்துக்கு வாழ்த்து
அவருக்கு முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தார். இந்த விழாவில் பிரதமர் மோடி, முன்னாள் குடியரசுத் துணைத்தலைவர் பிரணாப் முகர்ஜி, குடியரசுத் துணைத் தலைவர் ஹமீத்அன்சாரி மற்றும் அனைத்து மாநில ஆளுநர்கள், முதல்வர்கள் பங்கேற்றனர்.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக்












Click it and Unblock the Notifications