மாண்டியா: குத்து ரம்யாவிற்கு எதிராக ரக்சிதாவை களமிறக்கும் பாஜக?
மாண்டியா: கர்நாடக மாநிலம் மாண்டியா தொகுதி எம்.பியும் காங்கிரஸ் வேட்பாளருமான ரம்யாவிற்கு எதிராக ரக்சிதாவை களமிறக்க பாஜக முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மாண்டியா தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் வென்று காங்கிரஸ் எம்.பி.யாக இருப்பவர் நடிகை ரம்யா. இவர் மீண்டும் காங்கிரஸ் வேட்பாளராக மாண்டியா தொகுதியில் களம் இறங்குகிறார்.
இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் நடந்து வருகின்றன. தீவிர பிரச்சாரத்திலும் ரம்யா ஈடுபட்டுள்ளார்.

களமிறங்கும் ரக்சிதா
இவரை எதிர்த்து மாண்டியாவில் போட்டியிட தேவகவுடாவின் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியில் இருக்கும் நடிகை ரக்சிதா முடிவு செய்தார். இதற்காக விருப்ப மனுவும் கொடுத்து இருந்தார். ஆனால், தேவேகவுடா சீட் கொடுக்கவில்லை. இதனால் ரக்சிதா அதிருப்தி அடைந்தார்.

பாஜகவில் சேர முடிவு
இந்த லோக்சபா தேர்தலில் மாண்டியா தொகுதியில் ரம்யாவை எதிர்த்து போட்டியிட்டால் வெற்றி பெற முடியும் என்று ரக்சிதா கருதுகிறார். மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியில் டிக்கெட் கிடைக்காததால் பா.ஜ.கவில் சேர முடிவு செய்துள்ளார்.

டிக்கெட் உறுதி
பா.ஜ.கவில் சேர்ந்தால் அவருக்கு மாண்டியா தொகுதியில் போட்டியிட டிக்கெட் தருவதாக அந்த கட்சி உறுதி அளித்துள்ளது. எனவே, பாஜகவில் இணைந்து மாண்டியா தொகுதியில் ரம்யாவை எதிர்த்து ரக்சிதா போட்டியிடுகிறார். இதற்காக இன்று நடிகை ரக்சிதா பா.ஜனதாவில் இணைய இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

விஜய் கதாநாயகி
கன்னடம், தெலுங்கு உள்பட பல்வேறு மொழிகளில் நடித்துள்ள இவர் தமிழில் விஜய் ஜோடியாக ‘மதுர' படத்தில் நடித்தார். சினிமா உலகில் ரம்யாவுக்கும், ரக்சிதாவுக்கும் கடும் போட்டி இருந்தது.

மாண்டியாவில் அறிமுகம்
பிரபல கன்னட டைரக்டரும், நடிகருமான பிரேமை காதல் திருமணம் செய்து கொண்ட ரக்சிதா, முதலில் எடியூரப்பாவின் கர்நாடக ஜனதா கட்சியில் இருந்தார். அப்போது நடந்த சட்டசபை தேர்தலில் மாண்டியா தொகுதியில் போட்டியிட்டு குறைந்த ஓட்டு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.

ரம்யாவிற்கு போட்டி
தற்போது லோக்சபா தேர்தலில் மாண்டியா தொகுதியில் ரம்யாவிற்கு கடும் நெருக்கடியை ரக்சிதா ஏற்படுத்துவார் என்று கூறப்படுகிறது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications