பெண்ணுறுப்பு மேல் ஆணுறுப்பை வைத்தால் அது பலாத்காரமில்லை.. பலாத்கார முயற்சி தான்.. ஹைகோர்ட் தீர்ப்பு
ராய்ப்பூர்: ‛‛பெண்ணுறுப்பின் மேல் ஆணுறுப்பை வைத்தால் அது பலாத்காரம் இல்லை. பலாத்கார முயற்சி தான் ''என்று கூறி பாலியல் பலாத்கார வழக்கில் இளைஞருக்கு விதிக்கப்பட்ட 7 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையை மூன்றரை ஆண்டுகளாக குறைத்து சத்தீஸ்கர் உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
சத்தீஸ்கரின் தம்தாரி மாவட்டம் அர்ஜுனி காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வசித்து வரும் இளைஞர் ஒருவர் பக்கத்து வீட்டுக்கு சென்றார். அங்கு தனியாக இருந்த பெண்ணிடம் கடைக்கு சென்று வரும்படி கூறினார்.
அதற்கு அந்த பெண் காசு தரும்படி கூறினார். இதனால் கோபமடைந்த அந்த இளைஞர் அந்த பெண்ணை தனது வீட்டுக்கு இழுத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி அந்த பெண்ணை தனி அறையில் அடைத்து கை, கால்களை கட்டிப்போட்டு சித்ரவதை செய்துள்ளார்.

பலாத்கார வழக்குப்பதிவு
இந்த சம்பவம் கடந்த 2004ம் ஆண்டு மே மாதம் நடந்தது. நீண்ட நேரம் ஆகியும் மகள் வீட்டுக்கு வராததால் அவரது தாய் அக்கம் பக்கத்தில் தேடிப்பார்த்தார். நீண்டநேர தேடுதல் வேட்டைக்கு பிறகு அவர் தனது மகளை கண்டுபிடித்தார். அப்போது அந்த பெண் தனக்கு நேர்ந்த கொடுமையை சொல்லி தாயிடம் கதறி அழுதார்.
இதையடுத்து அர்ஜுனி போலீசில் புகார் செய்யப்பட்டது. பாலியல் பலாத்காரம் செய்ததாக இளைஞர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதோடு, அவர் கைதும் செய்யப்பட்டார். இதுதொடர்பான வழக்கு கீழமை நீதிமன்றத்தில் நடந்து வந்தது. தம்தாரி முதன்மை ஜுடிசியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. பிறகு வழக்கு ராய்ப்பூர் செசன்ஸ் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.
7 ஆண்டு கடுங்காவல் சிறை
வழக்கை விசாரித்த நீதிமன்றம் கடந்த 2005ம் ஆண்டில் தீர்ப்பு வழங்கியது. குற்றம்சாட்டப்பட்ட இளைஞரை குற்றவாளி என்று அறிவித்த நீதிமன்றம் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 376(1) (பலாத்கார வழக்கில் தண்டனை)-ன் கீழ் பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறி 7 ஆண்டு கடும் காவல் சிறை தண்டனையும், சட்டவிரோதமாக அடைத்து வைத்ததாக சட்டப்பிரிவு 342-ன் கீழ் 6 மாத சிறை தண்டனையும் விதித்து அதிரடியாக உத்தரவிட்டது.
உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு
இதையடுத்து அந்த இளைஞர் சத்தீஸ்கர் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கு நீதிபதி நரேந்திர குமார் வியாஸ் அமர்வில் விசாரிக்கப்பட்டு வந்தது. மருத்துவ அறிக்கை, பாதிக்கப்பட்டவரின் வாக்குமூலம் அடிப்படையில் உயர்நீதிமன்றம் தீவிரமாக விசாரித்து வந்தது.
அப்போது குற்றச்சாட்டப்பட்ட நபரின் ஆணுறுப்பு, பெண்ணுறுப்பில் செலுத்தப்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டது. இதனை மருத்துவ ரிப்போர்ட்டும் உறுதியளித்தது. அதேவேளையில் பாதிக்கப்பட்ட பெண்ணின் ஆடையில் விந்தணுக்கள் இருந்ததும் உறுதியானது.
நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு
இது உடல் ரீதியான தொடர்பு மற்றும் விந்து வெளியேற்றம் நிகழ்ந்திருப்பதைக் குறித்தாலும் கூட பெண்ணுறுப்பின் உள்ளே விந்தணு செலுத்தப்பட்டதற்கான ஆதாரங்கள் இல்லை என்பதை உயர்நீதிமன்றம் கவனித்தது.
அதாவது பெண்ணுறுப்பின் மேல் ஆணுறுப்பை வைத்து அந்த இளைஞர் மிரட்டி உள்ளார். இதனை பாதிக்கப்பட்ட பெண்ணும் தனது வாக்குமூலத்தில் உறுதி செய்திருந்தார். இதையடுத்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.
தண்டனை குறைப்பு
நீதிமன்றம் தனது தீர்ப்பில், ‛‛பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக கூறி பதிவு செய்யப்பட்ட ஐபிசி சட்டம் 375யை நிரூபிக்க முடியவில்லை. அதேவேளையில் அந்த பெண்ணை கட்டாயப்படுத்தி இழுத்து சென்று ஆடைகளை களைந்து பெண்ணின் பிறப்புறுப்பில் ஆணின் இனப்பெருக்க உறுப்பை வைத்துள்ளார்.
இது பலாத்கார முயற்சி தான். முழுமையான பாலியல் பலாத்காரம் என்று கூற முடியாது. இதனால் குற்றம்சாட்டப்பட்ட நபருக்கு விதிக்கப்பட்ட 7 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை மூன்றரை ஆண்டுகளாக குறைக்கப்படுகிறது'' என உத்தரவு பிறப்பித்தது.
-
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே!












Click it and Unblock the Notifications