கன்னியாஸ்திரியை பலமுறை பலாத்காரம் செய்த கேரள பிஷப் பிராங்கோ திடீர் ராஜினாமா!
கன்னியாஸ்திரியை பலமுறை பலாத்காரம் செய்த கேரள பிஷப் பிராங்கோ ராஜினாமா செய்துள்ளார்.
திருவனந்தபுரம்: பாலியல் புகாருக்கு ஆளான பிஷப் பிராங்கோ மீது விசாரணை நடந்து வரும் நிலையில் அவர் திடீரென ராஜினாமா செய்துள்ளார்.
கேரள மாநிலம் கோட்டயத்தில் உள்ள தேவாலயத்தை சேர்ந்த கன்னியாஸ்திரி ஒருவர், பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் மறைமாவட்ட பேராயர் பிராங்கோ முலக்கல் பலாத்காரம் செய்ததாக புகார் அளித்துள்ளார்.
கடந்த 2014-ம் ஆண்டு முதல் 2016 வரையிலான காலகட்டத்தில் பிராங்கோ பலமுறை தன்னை பலாத்காரம் செய்திருப்பதாக கன்னியாஸ்திரி குற்றம் சாட்டியுள்ளார்.

வாடிகனுக்கு கடிதம்
இதுதொடர்பான விசாரணை திருப்தியளிக்கவில்லை எனக்கூறிய கன்னியாஸ்திரி வாடிகன் திருச்சபைக்கு தனது புகார் தொடர்பாக கடிதம் எழுதினார். இதுபெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பிராங்கோ முலக்கல்
இதனிடையே பிஷப் பிராங்கோவுக்கு எதிராக போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன. மேலும் பிராங்கோ முலக்கல்லை கைது செய்ய வலியுறுத்தி சக கன்னியாஸ்திரிகளும் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

ஹைகோர்ட்டில் வழக்கு
இதைத்தொடர்ந்து பேராயர் பிராங்கோ முலக்கல்லுக்கு போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர். அதில், 19ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு கூறப்பட்டு உள்ளது. பேராயருக்கு எதிரான புகாரை போலீசார் சரிவர விசாரிக்கவில்லை எனக்கோரி கேரள ஹைகோர்ட்டிலும் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

திடீர் ராஜினாமா
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், வழக்கின் விசாரணையை 24 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர். இதனால், பிராங்கோ முலக்கல் கடும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளார். பிஷப் பிராங்கோ முலக்கல் மீதான புகார் வாடிகன் வரை சென்றுள்ள நிலையில் அவர் இன்று திடீரென பதவி விலகியுள்ளார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications