கிஸ் ஆப் லவ்: முத்தமிட்டு ஒரே நாளில் பிரபலம் ஆன ரஷ்மி நாயர், ராகுல்
திருவனந்தபுரம்: கிஸ் ஆப் லவ் என்ற போராட்டத்தை நடத்தி மக்கள் முன்னிலையில் கட்டிப்பிடித்து முத்தமிட்டு ஒரே நாளில் பிரபலம் ஆன மாடல் ரஷ்மி நாயர், கணவர் ராகுல் பசுபாலன் விபச்சார வழக்கில் கைதாகியுள்ளனர்.
கடந்த ஆண்டு கேரள மாநிலம் கோழிக்கோட்டில் உள்ள காபி கடை ஒன்றில் புகுந்த கும்பல் அதை தாக்கி சேதப்படுத்தியது. காபி கடை என்ற பெயரில் அசிங்கம் நடத்துவதாகக் கூறி அந்த கும்பல் அவ்வாறு செய்தது. இந்த சம்பவத்தை அடுத்து தான் மாடல் ரஷ்மி நாயரும், அவரது கணவர் ராகுல் பசுபாலனும் மிகவும் பிரபலம் ஆனார்கள்.
கோழிக்கோடு சம்பவத்தை கண்டித்து அவர்கள் போராட்டம் நடத்தினார்கள்.

கிஸ் ஆப் லவ்
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கொச்சியில் கிஸ் ஆப் லவ் என்ற போராட்டத்தை ராகுலும், ரஷ்மியும் நடத்தினார்கள். போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் ஜோடி, ஜோடியாக கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தனர்.

ரஷ்மி
பொது இடத்தில் போராட்டம் என்ற பெயரில் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தவர்களை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டு போலீஸ் வேனில் அமர்ந்திருக்கையில் ரஷ்மியும், ராகுலும் மக்கள், மீடியா முன்பு முத்தமிட்டனர். அவர்கள் முத்திமிட்ட போட்டோ சமூகவலைதளங்களில் மிகவும் பிரபலம் ஆனது.

பிரபலம்
கிஸ் ஆப் லவ் போராட்டம் நடத்தி முத்தமிட்டதால் ஒரே நாளில் பிரபலம் ஆனவர்கள் ரஷ்மியும், ராகுலும். அவர்களின் துணிச்சலை பலரும் பாராட்டினர்.

விபச்சாரம்
இப்படி மக்களின் பாராட்டை பெற்ற ரஷ்மி மற்றும் ராகுல் ஆன்லைன் மூலம் ஆண்களை கவர்ந்து விபச்சாரம் செய்த வழக்கில் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்.
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications