'பிசிபேலே பாத்தில்' எலி புழுக்கை.. பெண் பத்திரிகையாளரிடம் வாங்கிகட்டிய பெங்களூரின் முன்னணி ஹோட்டல்
பெங்களூர்: முன்னணி உணவகம் ஒன்று வழங்கிய உணவில் எலி புழுக்கை கிடந்துள்ள சம்பவம் பெங்களூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எம்.ஜி.ரோட்டிலுள்ள பிரபல பத்திரிகையொன்றில் பணியாற்றுபவர் அனுஷா ரவி. நேற்று மதியம், ஆபீசின் அருகேயுள்ள சர்ச் ஸ்ட்ரீட், வாசுதேவ அடிகாஸ் ஹோட்டலில் பிசிபெலே பாத் ஆர்டர் செய்துள்ளார்.
அலுவலக ஊழியர் பிசிபெலே பாத் வாங்கி வந்துள்ளார். ரூ.40 சாப்பாட்டுக்கும், பார்சலுக்கு ரூ.5ம் வசூலிக்கப்பட்டுள்ளது.

பூந்திக்கு நடுவே உவ்வே
ஆனால், பிசிபெலே பாத்துடன் கொடுத்த காராபூந்தி பார்சலை அனுஷா திறந்தபோது அதிர்ச்சி காத்திருந்தது. பூந்தியோடு சேர்த்து, எலி புழுக்கைகளும் அதில் கிடந்தன. உடனே, பார்சலோடு, ஹோட்டலுக்கே சென்றார் அனுஷா ரவி.

நோ ரீபண்ட்
எலி புழுக்கை கிடந்த சாப்பாட்டை திரும்ப பெற்றுக்கொண்டு, பணத்தை திருப்பி தருமாறு கேட்டுள்ளார். ஆனால், ஹோட்டல் நிர்வாகமோ, வேறு சாப்பாட்டை எக்சேஞ்ச் செய்யலாமே தவிர காசு தரமாட்டோம் என்று கூறியுள்ளனர்.

பூந்தி போச்சே
உங்கள் ஹோட்டலில் இனியும் நான் சாப்பிட தயாராக இல்லை என்று கூறிய அனுஷா, அத்தோடு நிற்காமல், ஹோட்டலில் இருந்த பூந்தி அத்தனையையும், கீழே கொட்டச்சொல்லி, போராடி வெற்றியும் பெற்றுள்ளார்.

மாநகராட்சியில் புகார்
அதேநேரம், உணவை திரும்பவும் தன்னோடு எடுத்துவரவில்லை. ஒருவேளை தேவைப்பட்டால் ஆய்வுக்கூடத்தில் அதை சோதனைக்கு உட்படுத்த வாய்ப்பு இருந்தது. இருப்பினும், மாநகராட்சி ஹெல்ஸ் இன்ஸ்பெக்டரிடம் அனுஷா ரவி புகார் அளித்துள்ளார்.

பதில்
இதனிடையே வாசுதேவ அடிகாஸ் எம்.டியான, ஜேக்கப் குரியன், இ-மெயில் மூலம், அனுஷாவை தொடர்புகொண்டு, உணவகத்தில் முழு சுகாதாரத்தை பேண நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளதாக உறுதியளித்துள்ளார்.

முன்னணி ஹோட்டல்
பெங்களூரிலுள்ள உயர்தர சைவ ஹோட்டல்களில் ஒன்றாக கருதப்படுவது வாசுதேவ அடிகாஸ். நகரின் பல பகுதிகளில் ஏகப்பட்ட கிளைகளோடு ஹோட்டல்கள் இயங்கிவருவது குறிப்பிடத்தக்கது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications