ரேஷன்தாரர்களுக்கு மேஜர் அறிவிப்பு.. ரேஷனில் அரிசி, கோதுமை வாங்காவிட்டால் சிக்கல்? உ.பி. புது அதிரடி
போபால்: குடும்ப அட்டைதாரர்களுக்கு பல்வேறு சலுகைகளை மத்திய அரசு அளித்து வரும்நிலையில், புதிய அதிரடி ஒன்றினை மத்திய பிரதேச அரசு கொண்டுவரப்போகிறதாம். அது என்ன?
இந்தியா முழுவதிலுமுள்ள ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்திற்காகவே, ரேஷன் கடைகள் மூலமாக, மலிவு விலையில் அரிசி, பருப்பு, எண்ணெய், சர்க்கரை, கோதுமை போன்ற அத்தியாவசிய உணவு பொருட்கள் மத்திய, மாநில அரசு சார்பில் வழங்கப்பட்டு வருகின்றன. இதைத்தவிர, கரீப் கல்யாண் அன்ன யோஜனா என்ற திட்டத்தின் கீழ் இலவசமாக உணவுப் பொருட்கள் 2020ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகின்றன..

கொரோனா: அதாவது கொரோனா தொற்று உச்சத்தில் இருந்தபோது, புலம்பெயர்ந்து வந்த தொழிலாளர்களுக்காகவே, இந்த திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியிருந்தது.. இதன் மூலம் தேசம் முழுவதும் 80 கோடி பேருக்கு ரேஷன் கடைகள் மூலம் இலவச உணவு தானியங்கள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன... இதில், கூடுதலாக 5 கிலோ உணவு தானியம் இலவசமாக தரப்படுகிறது. இந்த இலவச ரேசன் திட்டத்தை மேலும் 5 ஆண்டுகள் நீட்டிப்பதாக மத்திய அரசு உறுதி தந்துள்ளது.
நடந்து முடிந்த லோக்சபா தேர்தலின் ஒவ்வொரு பிரச்சாரங்களிலும், பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜக தலைவர்கள் பாஜக அரசின் இலவச ரேஷன் பொருட்கள் பற்றி பேசியிருந்தார்கள்.. அதுமட்டுமல்லாமல், இலவச ரேஷன் பொருள் 2029 வரை தொடரும் என்று பாஜகவின் தேர்தல் அறிக்கையிலும் தெரிவிக்கப்பட்டிருந்தது, ஏழை, எளிய மக்களின் கவனத்தை ஈர்த்திருந்தது.
ரேஷன்: இப்படிப்பட்ட சூழலில், இந்த திட்டத்தின்கீழ், கோடிக்கணக்கான குடும்பங்கள் பயனடைந்து வருகிறார்கள்.. எனினும், நிறைய பேர் ரேஷன் வாங்காமல் இருக்கிறார்களாம்.. சிலர் தவிர்க்க முடியாத காரணத்தால் வாங்க முடியாமல் இருக்கலாம் என்றாலும், தொடர்ந்து ரேஷன் பொருட்களை முன்வந்து வாங்காமல் விட்டுவிடுகிறார்ககளாம்.
ரேஷன் கார்டுகளை வைத்திருந்தும்கூட, அவற்றை முழுமையாக பயன்படுத்துவதில்லை என்று புகார் முளைத்திருக்கிறதாம். இவர்கள் ரேஷன் பொருட்களை வாங்கி செல்லாததால், மீதமான ரேஷன் பொருட்களை, 6 மாதமாக ரேஷன் கடையிலிருந்தே வைத்திருந்தாலும்கூட, நுகர்வோர் வந்து பெற்றுக் கொள்வதில்லை என்று கூறப்படுகிறது. இதுபோன்றவர்களால், தகுதியான குடும்பங்களுக்கும் உதவி கிடைக்காமல் போய்விடுவதாக அரசு கவலைக் கொள்கிறது.
புது அறிவிப்பு: அதனால்தான் தொடர்ந்து 6 மாதங்களாக ரேஷன் வாங்காத நுகர்வோரின் பெயர்களை, லிஸ்ட்டிலிருந்து நீக்க போவதாக அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. இப்படியொரு அதிரடி, மத்திய பிரதேச மாநிலத்தில் முதல்கட்டமாக துவங்கியிருக்கிறது..
நுகர்வோர் ரேஷன் பொருட்களை முறையாக பெற்றுக்கொள்ள வரவில்லையானால், பட்டியலிலிருந்தே அவரது பெயரை நீக்கப்பட்டு, அவர்களது பெயர்கள், இனிமேல் கடைக்கு வெளியே உள்ள தகவல் பலகையில் ஒட்டப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்திருக்கிறது.
ரேஷன் கடைகள்: அதுமட்டுமல்ல, இந்த அறிவிப்புக்கு பிறகும் நுகர்வோர் ரேஷன் கடைக்கு வரவில்லையானால், அல்லது இந்த நோட்டீஸ் போர்டினை பார்க்கும் பொதுமக்கள், சம்மந்தப்பட்டவர்களிடம் தகவல் தெரிவித்தும், ரேஷன் கடைக்கு வரவில்லையானால், அவர்களுக்கு ரேஷன் வாங்குவதில் விருப்பமில்லை என்றே கருதப்படும். அதன்பின்னர் அவர்களது பெயர்கள் நீக்கப்பட்டு, தகுதியான மற்ற நபர்களின் பெயர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டு, அவர்களுக்கு ரேஷன் கார்டுகள் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இதையடுத்து, 6 மாதங்களாக யார் யாரெல்லாம் ரேஷன் பொருட்களை பெறவில்லையோ, அவர்களது பெயரை லிஸ்ட் எடுக்கும்படி, உணவு மற்றும் குடிமைப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் தற்போது அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருக்கிறதாம்.
நடவடிக்கை: கோடிக்கணக்கான குடும்பங்களுக்கு பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா திட்டம் பேருதவியாக திகழ்ந்து வரும்நிலையில், ரேஷன் அட்டைகளை வைத்திருந்தும்கூட, சிலர் அதை சரியாக பயன்படுத்தாமல் இருப்பது, புது தலைவலியை அரசுக்கு தந்துள்ளதாம்..!
நம்முடைய தமிழகத்திலும் இப்படியொரு செய்தி சில மாதங்களுக்கு முன்பு மீடியாவில் வட்டமடித்தது. அப்போது தமிழக கூட்டுறவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் இதுகுறித்து பேசும்போது மிக நீண்ட விளக்கம் ஒன்றை தந்திருந்தார்.
விளக்கம்: "மத்திய அரசு ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. தமிழகத்தில் ரேஷன் பொருட்கள் 3 அல்லது 4 மாதங்கள் வரையில் வாங்காமல் இருந்தால், அந்த ரேஷன் அட்டைகள் ரத்து செய்யப்படும் என்று தகவல் உலா வருகிறது. ஆனால், அது உண்மையல்ல..
ரேஷன் அட்டை பொருட்கள் வாங்காமல் இருந்தால் ரத்து செய்யப்படாது. ரேஷன் கார்டில் குறிப்பிட்ட நபர் குறிப்பிட்ட முகவரியில் இருந்தால் அந்த கார்டு ரத்து செய்யப்பட மாட்டாது. போலி ரேஷன் கார்டுகள் மட்டுமே ரத்து செய்யப்படும்.. இந்தியாவில் மற்ற மாநிலங்களில் மத்திய உணவு பாதுகாப்பு விதிகளின்படி குறிப்பிட்ட நபர்கள் மட்டுமே ரேஷன் பொருட்களை வாங்க முடியும். ஆனால் தமிழகத்தில் பெரும்பாலான அனைவரும் ரேஷன் பொருட்கள் வாங்கலாம்" என்று விளக்கம் தந்திருந்தது நினைவுகூரத்தக்கது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications