இயக்குனர் மகேஷ் பட்டை கொல்ல கூலிப்படைக்கு ரூ.11 லட்சம் கொடுத்த தாதா ரவி பூஜாரி
மும்பை: மும்பை நிழல் உலக தாதா ரவி பூஜாரியின் ஆட்கள் பாலிவுட் இயக்குனர் மகேஷ் பட்டை 6 நாட்களில் நான்கு தடவை கொலை செய்ய முயன்று தோல்வி அடைந்துள்ளனர்.
மும்பை நிழல் உலக தாதா ரவி பூஜாரி நடிகர் ஷாருக்கான் உள்ளிட்ட பாலிவுட்காரர்களுக்கு மிரட்டல் விடுத்தார். இந்நிலையில் அவர் தற்போது பாலிவுட் இயக்குனர்கள் மகேஷ் பட் மற்றும் ஃபரா கானுக்கு குறி வைத்துள்ளது தெரிய வந்துள்ளது.
மும்பையில் உள்ள மகேஷ் பட்டின் அலுவலகத்திற்கு வெளியே 13 பேர் கொண்ட கும்பலை போலீசார் திங்கட்கிழமை கைது செய்துள்ளனர். அவர்களிடம் விசாரணை நடத்தியதில் தான் ரவி பூஜாரி மகேஷ் பட்டை கொலை செய்ய திட்டமிட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

மேலும் அவர்களை ஃபரா கானின் வீடு மற்றும் ஷாருக்கானின் ரெட் சில்லீஸ் அலுவலகத்தையும் கண்காணிக்க ரவி உத்தரவிட்டுள்ளார். ரவியின் ஆட்கள் கடந்த 2 மாதங்களாக மகேஷ் பட்டை கண்காணித்து வந்ததை ஒப்புக் கொண்டுள்ளனர். அவர்கள் கடந்த 10ம் தேதி துவங்கி 6 நாட்களில் 4 முறை மகேஷை கொலை செய்ய முயன்று தோல்வி அடைந்துள்ளனர்.
மகேஷ் பட்டை கொலை செய்ய முடியாவிட்டால் அவரது அண்ணன் முகேஷ் பட் அல்லது மகன் ராகுல் பட்டை கொல்லுமாறு ரவி தெரிவித்துள்ளார். மகேஷ் பட்டை கொன்று பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தி விரைவில் பப்ளிசிட்டி பெற்று அவர்களை மிரட்டுவது தான் ரவியின் திட்டம்.
கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து போலீசார் 4 துப்பாக்கிகளை பறிமுதல் செய்துள்ளனர். மகேஷை கொலை செய்ய ஹவாலா மூலம் அந்த கும்பலுக்கு ரூ.11 லட்சத்தை ரவி அளித்துள்ளதும் தெரிய வந்துள்ளது.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட்












Click it and Unblock the Notifications