ஊருக்குள்ளேயே இல்லையாமே.. பாஜக சீனியர் ரவிசங்கர் பிரசாத் வெல்ல முடியுமா.. பாட்னா சாஹிப் கள நிலவரம்
பாட்னா: பீகாரில் உள்ள பாட்னா சாஹிப் மக்களவைத் தொகுதியில் பாஜகவின் ரவிசங்கர் பிரசாத் மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர் மீரா குமாரின் அன்ஷுல் அவிஜித் இடையே நேரடிப் போட்டி நிலவுகிறது.
தற்போதைய எம்.பி.யும் முன்னாள் மத்திய அமைச்சருமான ரவிசங்கர் பிரசாத், தேர்தலுக்குப் பிறகு அந்தப் பகுதியை புறக்கணித்ததாக குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுவரும் நிலையில் போட்டி கடுமையாக உள்ளது.
கயஸ்தா பிரிவைச் சேர்ந்த ரவிசங்கர் பிரசாத், கணிசமான காயஸ்தா வாக்காளர்களைக் கொண்ட இந்த தொகுதியில் களமிறங்கியுள்ளார். பாஜகவுக்கு எதிராக பல்வேறு கட்சிகள் கயஸ்தா வேட்பாளர்களை முன்பு நிறுத்தியுள்ளன, ஆனால் வியூகம் வெற்றிபெறவில்லை. இம்முறை தலித் சாதியைச் சேர்ந்த அவிஜித்தை களமிறக்கியுள்ளது காங்கிரஸ்.

பாட்னாவில் உள்ள பாபு ஜெகஜீவன் ராம் வீட்டை அவிஜித் தனது பிரச்சாரத்தின் மையமாக மாற்றி அதன் மூலம் ஒரு ஸ்டேட்மென்ட்டை மக்களுக்கு கடத்தியுள்ளார். அதேநேரம், பாட்னா சாஹிப்பில் உள்ள பல வாக்காளர்கள் அந்த பகுதியில் ரவிசங்கர் பிரசாத் வசிக்காதது குறித்து அதிருப்தியை வெளிப்படுத்துகின்றனர். ஊருக்குள்ளேயே இல்லாதவருக்கு ஏன் ஓட்டு போட வேண்டும் என்று மக்களில் பலர் கேட்டதாக பிபிசி கள ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
விலைவாசி உயர்வு மற்றும் வேலையின்மை பற்றிய கவலைகள் பரவலாக உள்ளன. இருப்பினும், சில ஆதரவாளர்கள் மோடியின் "தலைமை மற்றும் நாட்டின் வளர்ச்சிக்கான முயற்சிகள்" இந்த கவலைகளை தூக்கி சாப்பிட்டுவிடுவதாகவும் தெரிவிக்கிறார்களாம்.
பாட்னா சாஹிப் தொகுதியில் அதிக நகர்ப்புற மக்கள் வசிக்கின்றனர். இந்தத் தொகுதிக்கான வாக்குப்பதிவு கடைசி கட்டமான ஜூன் 1ஆம் தேதி நடைபெறும். இது 6 சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கியது, இதில் 2020 பீகார் சட்டமன்றத் தேர்தலில் பாஜக 4 இடங்களில் வெற்றி பெற்றது.

ரவிசங்கர் பிரசாத் வெற்றி பெற விரும்பினால், உள்ளூர் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டிருக்க வேண்டியது அவசியமாக இருந்தது. ஆனால் பெரும்பாலானவரை தீர்க்கப்படவில்லை. ஏழைகளுக்கு இலவச உணவு வழங்கும் திட்டங்களின் மூலம் பாஜக ஓரளவுக்கு இங்கு ஆதரவைப் பெற்றுள்ளது. இருப்பினும், பீகாரில் வேலையில்லா திண்டாட்டம் மற்றும் பணவீக்கம் ஆகியவை குறிப்பிடத்தக்க பிரச்சினைகளாக உள்ளன.
பாட்னா சாஹிப்பில் தேர்தல் முடிவு பல்வேறு காரணிகளைப் பொறுத்தது. வேட்பாளர்களின் பிரச்சாரம் மற்றும் அவர்களின் செயல்பாடுகள் மற்றும் வாக்குறுதிகள் பற்றிய வாக்காளர்களின் மன ஓட்டம் முக்கிய பங்கு வகிக்கும் என்கிறது கள நிலவரம்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications