பேங்க் ஆஃப் பரோடா ஆப்க்கு தற்காலிகமாக தடை.. ரிசர்வ் வங்கி அதிரடி.. என்ன காரணம் தெரியுமா?
மும்பை: நாட்டின் பெரிய பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான 'பேங்க் ஆப் பரோடா'வின் 'பாப் வேர்ல்டு' செல்போன் ஆப்பை புதிய வாடிக்கையாளர்களுக்கு வழங்க ரிசர்வ் வங்கி தற்காலிகமாக தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. என்ன காரணம் என்பதை பார்ப்போம்.
பேங்க் ஆஃப் பரோடா நாட்டின் இரண்டாவது பெரிய பொதுத்துறை வங்கியாகும். அதேநேரம் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையில் பார்த்தால் அரசுக்கு சொந்தமான மூன்றாவது பெரிய வங்கியாகும். இந்த வங்கிதனது ஊழியர்களின் வசதிக்காக 'பாப் வேர்ல்டு' என்ற செல்போன் ஆப்பை வழங்கி உள்ளது. இன்டர்நெட் பேங்கிங் வசதியும் உள்ளது.

இந்நிலையில் 'பாப் வேர்ல்டு' ஆப்பில் ஆன்போர்டிங் செயல்பாட்டில் ஏற்பட்ட குறைபாடுகளைத் தொடர்ந்து, தனது மொபைல் ஆப்பை புதிய வாடிக்கையாளர்களைச் சேர்க்க வேண்டாம் என்று பேங்க் ஆஃப் பரோடாவுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. வங்கி ஒழுங்குமுறை சட்டம், 1949ன் பிரிவு 35ஏ வின் கீழ் தற்காலிக தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், தடை உத்தரவு உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.
சில பேங்க் ஆஃப் பரோடா ஊழியர்கள் குறிப்பிட்ட இலக்குகளை அடைவதற்காக மொபைல் வங்கியில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு அந்நியர்களின் மொபைல் எண்களைப் பயன்படுத்தியதாக புகார் எழுந்ததைத் தொடர்ந்து ரிசர்வ் வங்கி இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளது.
தற்போதுள்ள மொபைல் ஆப் வாடிக்கையாளர்களுக்கு எந்த இடையூறும் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்யவும் பேங்க் ஆஃப் பரோடா வங்கிக்கு ரிசர்வ் வங்கிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
பரோடா வங்கியின் மொபைல் ஆப்பில், வாடிக்கையாளர்களை இணைப்பதில் சில குறைபாடுகள் இருப்பது கவனிக்கப்பட்டது. இதையடுத்தே இந்நடவடிக்கையை ரிசர்வ் வங்கி மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது இக்குறைபாடுகளை வங்கி சரி செய்த பின்னர், ரிசர்வ் வங்கி ஆய்வு செய்யும். அப்போது திருப்தியடைந்த பின், புதிய வாடிக்கையாளர்களுக்கு மொபைல் செயலியை வழங்க ரிசர்வ் வங்கி அனுமதி வழங்கும் என்று கூறப்படுகிறது.
இதனிடையே பேங்க் ஆஃப் பரோடா வெளியிட்டுள்ள அறிவிப்பில்,"ரிசர்வ் வங்கியின் கவலைகளை நிவர்த்தி செய்ய வங்கி ஏற்கனவே சரியான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம். சில இடைவெளிகளை சரிசெய்வதற்கான கூடுதல் நடவடிக்கைகளை நாங்கள் தொடங்கியுள்ளோம்.
மேலும் ரிசர்வ் வங்கியின் கவலைகளை விரைவில் களைந்துஅவர்கள் திருப்திப்படுத்தும் வகையில் ரிசர்வ் வங்கியுடன் நெருக்கமாக பணியாற்றுவோம். அதேநேரம் புதிய வாடிக்கையாளர்களுக்கு டெபிட் கார்டுகள் மற்றும் ஏடிஎம்கள் தவிர நெட்பேங்கிங் மற்றும் வாட்ஸ்அப் வங்கி உள்ளிட்ட பிற டிஜிட்டல் சேவைகளை பயன்படுத்த முடியும்"இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications