For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

விரைவில் புதிய 100 ரூபாய் நோட்டுகள் புழக்கத்திற்கு வரும்: ரிசர்வ் வங்கி

விரைவில் புதிய 100 ரூபாய் நோட்டுகளை புழக்கத்திற்கு விடுகிறது ரிசர்வ் வங்கி.

By Karthikeyan
Google Oneindia Tamil News

மும்பை: விரைவில் புதிய ரூ.100 நோட்டுகளை புழக்கத்தில் விடும் பணிகளை ரிசர்வ் வங்கி தொடங்கியுள்ளது.

500 மற்றும் 1000 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று நவம்பர் 8ம் தேதி மத்திய அரசு அறிவித்தது. இதனைத் தொடர்ந்து புதிய 2000 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டு நாடு முழுவதும் விநியோகிக்கப்பட்டு வருகிறது.

RBI to issues new Rs. 100 note will soon

இந்நிலையில் புதிய 100 ரூபாய் நோட்டுகளை அச்சடித்து புழக்கத்தில் விட ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது. ஏற்கனவே புழக்கத்தில் உள்ள ரூ.100 நோட்டுகளைப் போன்ற அம்சங்களை உள்ளடக்கியதாகவே, புதிய நோட்டுகளும் இருக்கும் என ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் கூறியுள்ளார்.

பாதுகாப்பான நவீன முறையில் இந்த நோட்டுகள் அச்சடிக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்டு உள்ள அறிவிப்பில், " மகாத்மா காந்தி வரிசை-2005 நோட்டுகளில் இரண்டு இடங்களிலுள்ள எண்கள் வரிசையில் ஆர் என்ற ஆங்கில எழுத்து அச்சடிக்கப்படும், ஆளுர் உர்ஜித் ஆர் படேல் கையெழுத்து இடம்பெற்று இருக்கும்," என தெரிவிக்கப்பட்டு உள்ளது. புதிய 100 ரூபாய் நோட்டிற்கு பின்பகுதியில் 2017-ம் ஆண்டு அச்சிடப்பட்டு இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

English summary
The Reserve Bank will soon put into circulation new Rs 100 banknotes
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X