இளஞ்சிவப்பு, பச்சை கலர் கலவையில் மீண்டும் வருகிறது ஒரு ரூபாய் நோட்டு!
22 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அச்சடிக்கப்பட்டு புதிய வடிவில் 1 ரூபாய் நோட்டு புழக்கத்திற்கு வர உள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
டெல்லி : புதிய ஒரு ரூபாய் நோட்டு விரைவில் புழக்கத்திற்கு விடப்படும் என்று ரிசர்வ் வங்கி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
கடந்த 1994ம் ஆண்டில் இருந்து பழைய ஒரு ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்படுவது நிறுத்தப்பட்டது. ஒரு ரூபாய் நோட்டைவிட நாணயங்களை தயார் செய்யவே செலவு குறைவாக இருப்பதால் ஒரு ரூபாய் தாள்கள் அச்சடிப்பது நிறுத்தப்படுவதாக காரணங்கள் சொல்லப்பட்டன.
இந்நிலையில், புதிய வடிவில் ஒரு ரூபாய் நோட்டுகள் விரைவில் வெளியிடப்படும் என மத்திய அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்த அறிவிப்பை ரிசர்வ் வங்கியும் உறுதி செய்துள்ளது.

கையொப்பம்
ஒரு ரூபாய் நோட்டு குறித்த சிறப்பம்சங்களையும் ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. இதன்படி புதிய ஒரு ரூபாய் நோட்டில் நிதி அமைச்சக செயலாளரின் கையெழுத்து இரு மொழிகளில் இடம் பெற்றிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய நிறத்தில்
மேலும், இந்த புதிய நோட்டில் மஹாராஷ்டிராவில் உள்ள சாம்ராட் சாகர் என்று சொல்லப்படும்எண்ணெய் ஆய்வு மையத்தின் படமும், அசோகா தூணும் இடம் பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இளஞ்சிவப்பு மற்றும் பச்சை நிறங்களுடன் கூடிய வண்ணமயமான தாளில் புதிய ஒரு ரூபாய் நோட்டு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்பட்டுள்ளது.

சிறப்புகள்
இந்திய அரசு என்று இந்தியிலும், ஆங்கிலத்திலும் இடம்பெற்றிருப்பதோடு, புதிய ரூபாய் நாணய சின்னமும் இதில் அச்சிடப்பட்டிருக்கும் என்றும் ரிசர்வ் வங்கி விளக்கியுள்ளது. மேலும் 1 என்ற எண் கண்களுக்கு தெரியாத வகையில் அச்சிடப்படும் என்றும் தெரிகிறது.

நோட்டுகள் ரெடி
புதிய ஒரு ரூபாய் நோட்டுகள் ஏற்கனவே அச்சடிக்கப்பட்டு விட்டன. விரைவில் இது புழக்கத்திற்கு விடப்படும் என்று ரிசர்வ் வங்கி தனது அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவித்துள்ளது.

மறுவரவு
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாமல் போனது. இதையடுத்து புதிய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்பட்டு புழக்கத்தில் விடப்பட்டது. இந்நிலையில் 22 ஆண்டுகளுக்குப்பிறகு புதிய ஒரு ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்பட்டு வெளியிடப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications