மோடிக்கு நான் தேவையில்லை: ராகுலுக்காக பிரச்சாரம் செய்ய ரெடி- சல்மான் கான்
மும்பை: காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்திக்காக எப்பொழுது வேண்டுமானாலும் பிரச்சாரம் செய்ய தயார் என்று இந்தி நடிகர் சல்மான் கான் தெரிவித்துள்ளார்.
இந்தி நடிகர் சல்மான் கான் அண்மையில் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடந்த பட்டம் விடும் திருவிழாவில் கலந்து கொண்டார். அப்போது அவர் குஜராத் முதல்வரும், பாஜக பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடியுடன் சேர்ந்து பட்டம் விட்டார். மோடியை சிறந்த மனிதர் என்று பாராட்டிய சல்மான் அவரை பிரதமர் பதவிக்கு ஆதரிக்க மறுத்துவிட்டார்.

குஜராத் கலவரம் தொடர்பாக மோடி மக்களிடம் மன்னிப்பு கேட்க தேவையில்லை என்று சல்மான் தெரிவித்து பலரின் கண்டனத்திற்கும் ஆளானார். இந்நிலையில் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட சல்மான் கூறுகையில்,
நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களும் சமமானது. அனைத்துக்கும் சமமான முக்கியத்துவம் உள்ளது. அரசியல்வாதிகள் சிறப்பாக செயலாற்றி வருகிறார்கள். அரசியல் தலைவராக ராகுல் காந்தியை எனக்கு மிகவும் பிடிக்கும். எப்பொழுது தேவைப்பட்டாலும் அவருக்காக பிரச்சாரம் செய்ய தயாராக உள்ளேன். குஜராத்தில் மோடிக்கு நான் தேவையில்லை. அவர் மிகவும் பிரபலம். குஜராத்தில் மோடிக்கு இருக்கும் ஆதரவை நான் பார்த்தேன். அதனால் அவருக்கு நான் பிரச்சாரம் செய்யத் தேவையில்லை.
ராகுல் மட்டும் என்னை அழைத்தால் நான் நிச்சயம் அவருக்காக பிரச்சாரம் செய்வேன் என்றார்.
-
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications