லோக்சபா தேர்தலுக்குப் பின் மாநில கட்சிகளே நாட்டை வழிநடத்தும்: மமதா நம்பிக்கை
Subscribe to Oneindia Tamil

கொல்கத்தாவில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மமதா பானர்ஜி, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி மக்கள் விரோத நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஐமு கூட்டணி ஆட்சிக் காலத்தில் அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளன.
லோக்சபா தேர்தலையொட்டி நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். மார்க்சிஸ்ட் கட்சிக்கும் பாஜகவுக்கும் பூஜ்ஜியம்தான் கிடைக்கும். லோக்சபா தேர்தலுக்குப் பின்னர் மாநில கட்சிகளே நாட்டை வழிநடத்தும். அதிகார நாற்காலி என்பது தற்காலிகமானது. ஜனநாயகம் என்பதே நிலையானது.
அரசியலில் நிரந்தர நண்பர்களும் இல்லை.. நிரந்தர எதிரிகளும் இல்லை.. எனது எதிரியின் எதிரி எனது நண்பன் என்ற கொள்கையில் எனக்கு நம்பிக்கை இல்லை. எங்களைப் பொறுத்தவரை காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சிகளிடையே சம தொலைவிலேயே இருக்க விரும்புகிறோம் என்றார்.












Click it and Unblock the Notifications