பெங்களூரின் குளுகுளு நந்தி மலையில் 25 ஆயிரம் மரம் நடனும்.. நீங்க ரெடின்னா ரிஜிஸ்டர் பண்ணுங்க

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கர்நாடக தலைநகரம் பெங்களூரையடுத்து அமைந்துள்ளது நந்தி ஹில் என்ற மலைப்பகுதி. குட்டியாக ஒரு பிக்னிக் போக ஆசைப்படும் பெங்களூர்வாசிகள், காரிலோ, பைக்கிலோ சென்று அடைந்துவிடும் தூரத்தில் உள்ளது இந்த குளுகுளு மலை.

சமீபகாலமாக இங்கு மரங்கள் வெட்டப்படுவது அதிகரித்து நந்தி மலை தனது இயல்பான குளுமையை இழந்து வருகிறது. பெங்களூரின் புறநகர் பகுதிகளுக்கு மழையை ஈர்ப்பதில் பெரும் பங்கு வகித்த நந்தி மலை மரங்கள் வெட்டப்பட்டுள்ளதால், மழை அளவு குறைகிறது.

Register to plant 25,000 saplings at Bengaluru Nandi hill ranges

இந்த பிரச்சினையை சரி செய்ய யுனைட்டட் வே பெங்களூரு அமைப்பு, கர்நாடக மாநில தோட்டக்கலைத்துறை அமைச்சகத்துடன் இணைந்து நந்தி மலையில் 25 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் முயற்சியை முன்னெடுத்துள்ளது. வரும் 25ம் தேதி சனிக்கிழமை, பகல் 2 மணி முதல் 5 மணிவரையில் மரம் நடும் நிகழ்ச்சி நந்திமலை பகுதியில் நடக்கிறது.

இயற்கை மீது ஆர்வம் உள்ளவர்கள் இதில் பங்கேற்கலாம். மரம் நடுவதை பேஸ்புக்கில் போட்டு பிறருக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தலாம். இதில் பங்கேற்போர் பதிவு செய்ய https://docs.google.com/forms/d/1BJwuGpwJPf5OAtnhxIeAgUa8fhvKRhb8C3-utmTFfko/viewform என்ற இணைய முகவரிக்கு செல்லவும். மேலும் தகவல்கள் தேவைப்படுவோர், [email protected] அல்லது [email protected] என்ற இ-மெயில் முகவரிக்கோ, 91- 080 - 4090 6345 / 2525 8363 என்ற தொலைபேசி எண்ணுக்கோ தொடர்பு கொள்ளலாம். மரம் வளர்ப்போம், மழை பெறுவோம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+